"ஒரு கதை சொல்லட்டா சார்" ரஜினிக்கு பதில் அஜித்! தனுஷ் இயக்கத்தில் AK 64?

அஜித் – தனுஷ் கூட்டணி இணையவுள்ளதாக வெளியான தகவல் ஒன்று, கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ள இந்த அப்டேட் உண்மைதானா..? என்பதே தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

Mar 5, 2025 - 17:29
Mar 5, 2025 - 17:49
 0
"ஒரு கதை சொல்லட்டா சார்" ரஜினிக்கு பதில் அஜித்! தனுஷ் இயக்கத்தில் AK 64?
அஜித்தின் 63வது படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அஜித் - தனுஷ் இணையும் ஏகே 63 படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ரஜினிகாந்த் மேனரிசம் ஸ்டைலில் கேங்ஸ்டர் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் விடாமுயற்சி எதிர்பார்த்தளவுக்கு ஹிட்டாகாத நிலையில், அவரது அடுத்தப் படமான குட் பேட் அக்லியின் டீசர் வெளியாகி மரண மாஸ் காட்டியது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், அஜித் ரசிகர்களுக்கு தரமான ஃபேன்பாய் மொமண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குட் பேட் அக்லி டீசருக்கு இப்படியொரு ரீச் கிடைக்கும் என நினைத்துப் பார்க்காத அஜித், செம வைப்-பில் உள்ளாராம். இதனால் அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கால்ஷீட் கொடுக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக சிறுத்தை சிவா, விஷ்ணுவர்த்தன் ஆகியோரது பெயர்களும் இந்த லிஸ்ட்டில் இருந்தன.

இந்த நிலையில், இப்போது அஜித்தின் ஏகே 64 டைரக்டர் லிஸ்ட்டில், திடீர் என்ட்ரியாக தனுஷ் பெயரும் இடம்பிடித்துள்ளதாம். பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை என, தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுத்து வரும் தனுஷ், சில தினங்களுக்கு முன்னர் அஜித்தை சந்தித்ததாகத் தெரிகிறது. அப்போது அஜித்துக்காக தனுஷ் ஒரு கதை சொல்ல, அதில் இம்ப்ரஸ்ஸான அவர், திரைக்கதையை ரெடி செய்துவிட்டு சொல்லுங்க எனக் கூறியுள்ளாராம். அஜித் இப்படி க்ரீன் சிக்னல் கொடுப்பார் என எதிர்பார்க்காத தனுஷ், உடனே அதற்கான வேலையை தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் தீவிரமான ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு படத்திலாவது ரஜினியுடன் நடித்துவிட வேண்டும்... ரஜினியின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசை... அல்லது ரஜினியை டைரக்ட் செய்ய வேண்டும்.... இது எல்லாமே தனுஷின் வாழ்நாள் ஆசை. அதோடு ரஜினிக்காக தனுஷ் ஒரு கதை எழுதி வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இனிமேல் ரஜினியுடன் இணைய வாய்ப்பு கிடைக்காது என்பதால், சூப்பர் ஸ்டாருக்காக எழுதிய கதையில் அஜித்தை நடிக்க வைக்க தனுஷ் பிளான் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை அஜித் – தனுஷ் கூட்டணி உறுதியானால், இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியோ 

மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் படத்தை பிருத்விராஜ் இயக்கியிருந்தார். அதோடு லூசிஃபரில் பிருத்விராஜ் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார். அதேபோல் அஜித்தை டைரக்ட் செய்வதோடு, அந்தப் படத்தில் தனுஷும் கேமியோவாக வந்து மிரட்ட வேண்டும் என ரசிகர்கள் இப்போதே பேராசைப்பட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow