குருவியாக மாறிய 'வாகா' நடிகை உடல் முழுக்க கடத்தல் தங்கம் சிக்கிய 14.8 கிலோ தங்கம்..?
பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளவில் இந்தியர்களிடம் தான் அதிகளவு தங்கம் இருப்பது அனைவரும் அறிந்ததே. குடிக்க தண்ணி இல்லாமல் கூட வாழ்ந்துவிடுவார்கள் போல, தங்கம் இல்லையென்றால் அவ்வளவு தான். அதுமட்டும் இல்லாமல், இப்போதைய பொருளாதார சூழலில், தங்கத்தில் முதலீடு செய்வது தான் இருப்பதிலேயே சேஃப்டி என சொல்லப்படுகிறது. அதேநேரம், இந்தியாவில் எதற்கெடுத்தாலும் Tax போடுவதால், தங்கம் வாங்க படாதபாடு பட வேண்டியுள்ளது. இதனை சமாளிக்க Tax குறைவாக இருக்கும் அரபு நாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதுவும் விதவிதமாக தங்கம் கடத்தி வரப்படுவது தொடர்கதையாகிவிட்டது.
தங்கம் கடத்துவதற்காக ‘குருவிகள்’ எனப்படும் நெட்வொர்க் செயல்பட்டு வருவதை பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால், ஒரு நடிகையே குருவியாக மாறி தங்கம் கடத்தியது தான் அதிகாரிகளை இப்போது மிரள வைத்துள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மக்ளூரைச் சேர்ந்த 32 வயதான ரன்யா ராவ், 2014ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான மாணிக்யா படத்தில் கிச்சா சுதீப் ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். தமிழில் விக்ரம் பிரபு ஜோடியாக ‘வாகா’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஒருகட்டத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் தங்கக் கடத்தலில் இறங்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அதாவது ரன்யா ராவ், துபாயில் இருந்து பெங்களூரு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் வந்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பார்த்து, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
கிட்டத்தட்ட தங்கத் தாமரையாகவே தகதகவென ஜொலித்துள்ளார் ரன்யா ராவ். இதனால் ரன்யா ராவிடம் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அவரது லக்கேஜில் 25 தங்கக் கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அதன்படி ஒட்டுமொத்தமாக ரன்யாவிடம் 14.8 கிலோ தங்கம் இருந்ததை கண்டு அதிர்ச்சியான சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர்.
ஆனால், ரன்யா ராவ், “என்னோட அப்பா ராமசந்திர ராவ் ஐபிஎஸ் ஆபிஸர், அவரு டிஜிபி போஸ்டிங்ல இருக்கார். என்ன பிக்கப் பண்ண பெங்களூரு போலீஸ் வர்றாங்க” என உருட்டிப் பார்த்துள்ளார். அதையெல்லாம் கண்டுகொள்ளாத சுங்கத்துறை அதிகாரிகள், அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதுமட்டும் இல்லாமல், ரன்யா ராவ், கடந்த 15 நாட்களில் 4 முறை துபாய் சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நடிகையே குருவியாக மாறி தங்கம் கடத்திய சம்பவம், சுங்கத்துறை அதிகாரிகள் மட்டுமின்றி, திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
What's Your Reaction?






