நடிகை ஹன்சிகா படத்தில் மோசடி.. பிரபல தயாரிப்பாளர் மீது வழக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான மஹா திரைப்படத்தின், திரையரங்கு உரிமை விவகாரத்தில், பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Sep 3, 2024 - 20:39
Sep 4, 2024 - 10:04
 0
நடிகை ஹன்சிகா படத்தில் மோசடி.. பிரபல தயாரிப்பாளர் மீது வழக்கு
நடிகை ஹன்சிகா நடித்த திரைப்படத்தில் மோசடி நடைபெற்றதாக வழக்குப்பதிவு

பாலிவுட் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே, அரண்மனை போன்ற படங்கள் உள்ளிட்ட தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரது ஐம்பதாவது படமாக ஜமீல் என்ற இயக்குனர் இயக்கிய மஹா என்ற திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.

இந்த படத்தை அப்பா, கொலையுதிர் காலம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களை தயாரித்த எட்செட்ரா என்டர்டைன்மெண்ட் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதியழகன் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டரில் நடிகை ஹன்சிகா மோத்வானி புகைப்பிடித்தவாறு வெளியான போஸ்டர் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.

இந்தப் படத்தின் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான உரிமையை அளிப்பதாக ஆன்ஸ்கை டெக்னாலஜி என்ற சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகஸ்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. நடிகர் சிலம்பரசன் மற்றும் ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கிற காரணத்தினால் 15 முதல் 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்ற அடிப்படையில் திரையரங்கு உரிமைக்காக ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மஹா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதாகவும், ஒப்பந்தத்தை மீறி மோசடி செய்யப்பட்டு, படத்தை அதன் தயாரிப்பாளர் மதியழகன் வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது. இதையடுத்து ஆன் ஸ்கை டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாகி மோட்டூ, சென்னை காவல்துறையிடம் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்படாத காரணத்தினால், நீதிமன்றத்தை நாடி வழக்கு பதிவு செய்ய உத்தரவு பெற்றிருந்தார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பண மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான எட்செட்ரா என்டர்டைன்மென்ட் நிறுவன தயாரிப்பாளர் மதியழகன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow