எக்ஸ் தளத்திலிருந்து ப்ளூஸ்கை தளத்திற்கு தாவும் பயனர்கள்.. காரணம் இதுதான்

ப்ளூஸ்கை தளத்தில் 16 மில்லியன் பயனாளர்கள் உள்ளதாகவும் இத்தளம் வேகமாக வளர்ந்து வருவதன் மூலம் அதிப்படியான பயனாளர்களை ஈர்க்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Nov 19, 2024 - 05:52
Nov 19, 2024 - 06:02
 0
எக்ஸ் தளத்திலிருந்து ப்ளூஸ்கை தளத்திற்கு தாவும் பயனர்கள்.. காரணம் இதுதான்
எலான் மஸ்க்


அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வருகிற ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இதையடுத்து சமீபத்தில் அவர் தனது அமைச்சரவையில் இடம்பெறவுள்ள செயலாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதில், டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்கத் திறன் துறையை வழிநடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ்  சமூக வலைதளத்திலிருந்து பயனர்கள் வெளியேறி ப்ளூஸ்கை தளத்தில் இணைந்து வருவதாக கூறப்படுகிறது. பிரிட்டிஸ் நாளிதழான ‘தி கார்டியன்’ (The Guardian) எக்ஸ் தளத்திலிருந்து வெளியேறியுள்ளது.  தவறான தகவல்கள் மற்றும் அதிகப்படியான வெறுப்பு பிரச்சாரம் காரணமாக பயனாளர்கள் வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிபர் தேர்தலின் போது டிரம்பிற்கு எக்ஸ் தளத்தின் மூலம் எலான் மஸ்க் அளித்த அதிகப்படியான ஆதரவும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

எக்ஸ் தளத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து அந்நிறுவனத்திலிருந்து  இருந்து  வெளியேறிய முன்னாள் தலைவரான ஜாக் டோர்சி இத்தளத்தை நிறுவினார். என்றாலும் நடப்பு மே மாதம் அதிலிருந்து விலகினார். தற்போது, இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜே கிராபர் உள்ளார். ப்ளூ ஸ்கை பயனர்களுக்காக தொடங்கப்பட்ட சமூக ஊடகச் சேவையாகும். இதில், பயனர்கள் தங்களது குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடலாம். இந்த தளமானது பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பதால் அதிக பயனாளர்களை ஈர்க்கிறது. எக்ஸ் தளத்தில் 250 மில்லியன் பயனாளர்கள் உள்ள நிலையில் ப்ளூஸ்கை தளத்தில் 16 மில்லியன் பயனாளர்கள் உள்ளதாகவும் இத்தளம் வேகமாக வளர்ந்து வருவதன் மூலம் அதிப்படியான பயனாளர்களை ஈர்க்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow