வணங்கான் படப்பிடிப்பில் உணரவில்லை... இயக்குநருக்கு இதயம் கணிந்த நன்றி - அருண்விஜய் நெகிழ்ச்சி

"வணங்கான்" திரைப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் பாலாவுக்கு நடிகர் அருண்விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

Nov 19, 2024 - 05:46
Nov 19, 2024 - 05:48
 0
வணங்கான் படப்பிடிப்பில் உணரவில்லை... இயக்குநருக்கு இதயம் கணிந்த நன்றி - அருண்விஜய் நெகிழ்ச்சி

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தை திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்த அப்படத்தின் நாயகன் அருண்விஜய் ஆனந்தக் கண்ணீர் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்

சூர்யா – இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகி வந்த வணங்கான் திரைப்படம், சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்த திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகினார்.  சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா விலகியதாக கூறப்பட்டது.  இதனைத்தொடர்ந்து வணங்கான் படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

இந்நிலையில், திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்த அருண் விஜய், இயக்குநர் பாலாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு,

நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. 
ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில்,  என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.

எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும்
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.  மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன் என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார். 

வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய்யுடன் சமுத்திரகனி, மிஷ்கின், ரோஷினி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்க, ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ட்ரைலரை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow