பணத்திற்காக விருந்தாக்கப்பட்ட மகள்கள் ..கொடூரத் தாயின் அதிர்ச்சி செயல்.. கணவரின் புகாரில் மனைவி உட்பட இளைஞர்கள் கைது

சென்னையில் பணத்துக்காக இரு மகள்களையும் இளைஞர்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் தாய் ஒருவர். சொகுசு வாழ்க்கைக்காக மகள்களின் கற்பை விற்ற கொடூரத் தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன நடந்தது பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....

Feb 27, 2025 - 17:09
 0
பணத்திற்காக விருந்தாக்கப்பட்ட மகள்கள் ..கொடூரத் தாயின் அதிர்ச்சி செயல்..   கணவரின் புகாரில் மனைவி உட்பட இளைஞர்கள் கைது
கொடூரத் தாயின் அதிர்ச்சி செயல்.. கணவரின் புகாரில் மனைவி உட்பட இளைஞர்கள் கைது

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த அந்த 38 வயதான கொடூரத் தாய்க்கு 2 மகள்கள். கணவருடன் வசித்து வரும் இவர் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்லும் போது 23 வயதான ஆட்டோ ஓட்டுநர் முகமது ரபிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன் நம்பரை மாற்றிக் கொண்டு ஒருவருக்கு தங்களின் கள்ள அன்பை வாட்ஸ்ஆப் மூலம் பகிர்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாட்ஸ் ஆப் காதல் கசந்து போக, நேரில் சந்தித்தால் என்ன என்று இருவரும் முடிவு செய்ய, தடையாக இருக்கும் கணவரை என்ன செய்வது என்று தீவிரமாக ஆலோசித்து இருக்கின்றனர். 

அப்போது தான் முகமது ரபிக் கொடுத்த ஐடியா படி, கணவருக்கு தினமும் இரவு படுக்கும் முன் பாலில் தூக்க மருந்து கொடுத்து, அவர் ஆழ்ந்து தூங்கிய பின், அந்த பெண்ணின் வீட்டிலேயே இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். நாள்கள் ஓட அந்த பெண்ணின் இரு மகள்களையும் குறிவைத்த முகமது ரபிக், 17 வயது மகளை தனக்கும், 16 வயது மகளை தனது நண்பன் அப்துல் கலாமுக்கும்  விருந்தாக்கினால், நிறைய பணம் தருவதாக அந்த பெண்ணுக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளார்.  

பணத்தாசை கண்னை மறைக்க, முகமது ரபிக்கின் யோசனையை ஏற்று மகள்களை அவர்களுக்கு விருந்தாக்க தொடங்கி இருக்கிறார் அந்த கொடூரத் தாய். மகள்களை விருந்தாக்கி அதில் வரும் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்து வந்துள்ளார். தாய் தங்களை தவறாக வழி நடத்துவதை உணர்ந்த மகள்கள் இருவரும், பாலியல் கொடுமைகளை தாங்க முடியாமல் தங்களின் தந்தையிடம் கதறியுள்ளனர். அப்போது தான் தன் வீட்டில் இரவில் நடக்கும் மர்மங்கள் அவருக்கு புரிந்துள்ளது. மேலும் தனக்கு தினமும் தூக்க மாத்திரை கொடுத்து  உறங்கவைத்து விட்டு தனது மனைவி செய்யும் லீலைகள் அறிந்து அதிர்ந்து போய் இருக்கிறார் அந்த அப்பாவி அப்பா. 

இதுகுறித்து தனது மனையிடம் கேட்க, அவரோ ஏடாகூடமாக பேச வேறு வழியின்றி காவல் துறையை நாடி இருக்கிறார். பின்னர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அவர் புகார் அளிக்க,  அதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாயுடன், முகமது ரஃபிக், அப்துல் கலாம் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். பணத்திற்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் பெற்ற மகள்களையே விலைபேசி சீரழித்த தாயை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர் சென்னை மக்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow