காலையிலேயே சென்னைவாசிகளுக்கு 'ஜில்' நியூஸ்... இன்றும், நாளையும் கொட்டப்போகுது மழை!
10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் வெயில் கடுமையாக கொளுத்திய நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களாக விட்டு, விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
9ம் தேதியான இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் இன்றும் (9ம் தேதி), நாளையும் (10ம் தேதி) மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தாலுகா அலுவலகம் பந்தலூர், நீலகிரி சின்னக்கல்லார் பகுதியில் 3 செ.மீ மழை பெய்துள்ளது. தேவாலா அவலாஞ்சி, வால்பாறை PTC (கோயம்புத்தூர்), வால்பாறை PAP 2 (கோயம்புந்தார்). மேல் பவானி (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தார். சோலையார் (கோயம்பத்தார் சிறுவாணி அடிவாரம் ஸ்ரீர் சுத்திகரிப்பு நிலையம்) (கோயம்புத்தூர்), உபாசி தேயிவை ஆராய்ச்சி அறக்கட்டளை (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது.
9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
What's Your Reaction?