8 மணி நேர சோதனை; ஆவணங்களை எடுத்துச் சென்ற சிபிசிஐடி அதிகாரிகள் - சிக்குவாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு அலுவலகம் உள்ளிட்ட ஏழு இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவடைந்தது.

Jul 7, 2024 - 22:27
Jul 8, 2024 - 18:08
 0
8 மணி நேர சோதனை; ஆவணங்களை எடுத்துச் சென்ற சிபிசிஐடி அதிகாரிகள் - சிக்குவாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
CBCID Raids MR Vijayabaskar House

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் மீது கரூர் நகர போலீசார் புகார் மனு அளித்தார் இந்நிலையில் வாங்கல் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த 1-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  6 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த 19ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி ஜாமீன் மீதான வழக்கை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். தற்பொழுது முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் பத்திற்கும் மேற்பட்ட சிபிசிஐடி தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து தனது தந்தை ராமசாமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை கவனித்துக் கொள்ள இடைக்கால ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் மனு மீதான விசாரணையை நான்காவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு சாயப்பட்டறை அலுவலகம், அவரது தம்பி சேகர் வீடு, உறவினர் ராஜேந்திரன் வீடு, டிரஸ்ட் அலுவலகம், பெட்ரோல் பங்க் உட்பட ஏழு இடங்களில் இன்று காலை 7 மணி முதல் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

கரூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்புடன் வருவாய்த் துறையினரின் உதவியுடன் 8 மணி நேரமாக நடந்த சோதனையின் முடிவில் டிரஸ்ட் அலுவலகம், நூல் குடோன் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

மேலும் அப்பகுதியில் இருந்த அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து சென்றனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டின் முன்பாக வீட்டை சுற்றி போடப்பட்டிருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டு போலீசார் அங்கிருந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow