தவெக மாநாட்டிற்கு போலீஸ் விதித்த நிபந்தனைகள் என்ன? வெளியான தகவல்கள்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், காவல்துறை சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sep 8, 2024 - 18:44
Sep 9, 2024 - 10:56
 0
தவெக மாநாட்டிற்கு போலீஸ் விதித்த நிபந்தனைகள் என்ன? வெளியான தகவல்கள்
தவெக மாநாட்டிற்கு போலீஸ் நிபந்தனைகள்

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, தனது புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் விஜய். இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியினை அறிமுகம் செய்து வைத்தார். இதில், தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட முக்கியமான நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். இதன் அடுத்தக்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலையில் அக்கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு பாதுகாப்பு கோரி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தவெக சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெயரில் கொடுக்கப்பட்டுள்ள அந்த மனுவில், மாநாடு குறித்த முழு தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கான அனுமதி கேட்டு காவல்துறையில் மனு அளித்த போது 21 கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கான பதிலை தவெக பொதுச்செயலாளர் விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் வழங்கி இருந்தார்.

அதில், மாநாடு நடத்தும் நேரம் - மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை எனவும், மாநாடு மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள் என்ற கேள்விக்கு, ஆண் பெண் முதியவர் விபரம் ஆண்கள்- முப்பதாயிரம், பெண்கள் 15 ஆயிரம், முதியவர் ஐயாயிரம், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை, மாற்றுத்திறனாளிகள் இருக்கை 500 எனவும், மாநாட்டு பந்தலை ஜேபி எண்டர்பிரைஸ் அமைப்பதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், “காவல்துறையினர் கேட்டிருந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டோம். காவல்துறை அனுமதி கிடைத்தவுடன் தமிழக வெற்றிக்கழக மாநாட்டின் தேதியை கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதில், “மாநாடு நடைபெறும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட மாநாடு சம்பந்தப்பட்ட இடங்களின் வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாநாடு தொடங்கும் நேரத்திற்கும் அரைமணி நேரத்திற்கு முன்னதாக, தொண்டர்கள் வந்துவிட வேண்டும் என்று அதற்கு மேகொண்டு பங்கேற்க செல்லும் தொண்டர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அமர நெரிசல் இல்லாமல் தனியாக இடம் ஒதுக்க வேண்டும் எனவும், மாநாடு நடக்கும் பகுதியில் பட்டாசு வெடித்தல் வாண வேடிக்கை உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும் எனவும் மாநாடு நடைபெறும் இடம் முழுவதும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும் நிபத்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow