ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு: செல்வ வரி ஆவணங்கள் முழுமையாக இல்லை - வருமான வரித்துறை

முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் முழுமையாக இல்லை என வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Mar 5, 2025 - 20:52
 0
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு: செல்வ வரி ஆவணங்கள் முழுமையாக இல்லை - வருமான வரித்துறை
ஜெயலலிதாக்கு எதிரான வழக்கு: செல்வ வரி ஆவணங்கள் முழுமையாக இல்லை - வருமான வரித்துறை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  செல்வ வரி (wealth tax) தொடர்பான கணக்கை முறையாக பல ஆண்டுகள் தாக்கல் செய்யவில்லை என்று கூறி வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

செல்வ வரி சட்டம் 35வது பிரிவின் கீழ் இந்த வழக்குப் பதிவானது.  இந்த வழக்கிலிருந்து விடுவிக்ககோரி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில்  ஜெயலலிதா வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் கடந்த 2008, மற்றும் 2009 ம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு தாக்கல் செய்தது.

இந்த மேல்முறையீடு வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சட்டப்பூர்வ வாரிசுகள் இந்த வழக்கில் சேர்க்கபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் .எஸ். சுந்தர் மற்றும் சி. சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர் சத்யா குமார், எத்தனை வழக்குகள் விடுவிக்கபட்டதை எதிர்த்து வருமான வரித்துறை மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் எந்த ஆண்டிற்கான செல்வ வரி செலுத்தவில்லை.

 சில ஆண்டுகான செல்வ வரி விடுவிக்கபட்டதை வருமானவரி துறை  உறுதி செய்துள்ளது. எனவே மேல் முறையீடு செய்த வருமானவரி துறை அனைத்து ஆவணங்களையும் தங்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் எங்கள் தரப்பு இறுதி வாதத்தை தொடங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த வருமான வரித்துறை தரப்பு வழக்கறிஞர் தங்களிடம் பல. ஆவணங்கள் இல்லை என தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள் வருமானவரி மேல் முறையிட்டு மனு ஆவணங்கள் உள்ளதை வைத்து அதன் அடிப்படையில் விசாரணை தொடரலாம் என தெரிவித்து விசாரணை நான்கு வாரத்திற்கு தள்ளிவைத்தார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow