2026ல் அதிமுக உடன் பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி.. அண்ணாமலை முடிவு?

அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என்று பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதே நேரத்தில் பங்காளிக்கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Sep 5, 2024 - 22:00
Sep 6, 2024 - 09:56
 0
2026ல் அதிமுக உடன் பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி.. அண்ணாமலை முடிவு?
nainar nagendran

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பலமுனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக, அதிமுக பிரிவு ஏற்பட்ட பின்னர், முதன் முறையாக பாஜகவின் மூத்த தலைவர்கள் கூட்டணி பற்றி பேசி வருகின்றனர். 

அதிமுக மற்றும் பாஜக இடையே இணக்கம் மேற்பட்டால் மகிழ்ச்சி அடைவதாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருநெல்வேலியில் இன்று பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்த விஜய் தாரணிக்கு நிச்சயம் கட்சிப் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் பிறந்தநாள் ஒட்டி இன்று அவரது மணி மண்டபத்திற்கு வருகை தந்திருந்த நெல்லை பாஜக உறுப்பினர் நயினார் ராஜேந்திரன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கையில் அதிமுகவில் பெரும் பதவியில் இருந்து விட்டு தற்போது பாஜகவில் இணைந்த நிலையில் எனக்கும் அந்தக் கட்சியிலிருந்து பதவி தரப்படவில்லை தற்போது சட்டமன்ற குழு உறுப்பினராக தான் இருக்கிறேன் என்றார். அதேபோல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்த விஜய் தாரணிக்கு நிச்சயம் கட்சிப்பதவி வழங்கப்பட வேண்டும்.

நடிகர் விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடிப்பதால் விஜய்யை கண்டு திமுக பயப்படுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன்,  யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் அப்படி அனுமதி கொடுத்து விட்டால் இது போன்ற பிரச்சனைகள் வராது எனவும் அனுமதி கொடுக்க 21 கேள்விகள் கேட்பதன் மூலம் விஜய்யை கண்டு திமுக அஞ்சுவதாக தோன்றுகிறது என்றார்.

மேலும் பேசிய அவர்,  “திமுக ஆட்சியில் விளம்பரத்துக்கு அதிக செலவு செய்து வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் திட்டங்களைவிட விளம்பரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகையை 2 ஆண்டுகள் கழித்து மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு வழங்கியிருக்கிறார்கள்” என்றார். 

2026 தேர்தலில் அதிமுகவுடன் பாஜகவுக்கு இணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான்” என்று அவர் கூறினார். பாஜக உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து விட்டார். அதே போல பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையும் பாஜக பங்காளி கட்சிகளுடன் கூட்டணி சேராது என்று பலமுறை கூறியிருக்கிறார்.  

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு படிக்கச் சென்றுள்ளார். இதனையடுத்து கட்சியை வழிநடத்த வழிகாட்டுதல் குழு எச், ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அதிமுக பாஜக இடையே இணக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இறங்கியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வருவாரா? பார்க்கலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow