பாரதத்தின் முக்கிய பலம் சனாதன தர்மம் - ஆர்.என்.ரவி

பாரதத்தின் முக்கிய பலம் சனாதன தர்மத்தைத் தவிர வேறில்லை. பாரதத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு தேசியத் தலைவர் நமக்கு இருக்கிறார் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

Jan 30, 2025 - 10:34
 0

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் "காசி கும்பாபிஷேகம்" என்னும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என் ரவி கலந்துகொண்டு "காசி கும்பாபிஷேகம்" என்னும் புத்தகத்தை  வெளியிட்டார்.. இந்த நிகழ்ச்சியில் ஐஐடியின் இயக்குனர் காமகோடி, துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது, 

நகரத்தார் சமூதாயத்தில் உள்ள குழப்பமான நிலை. ஆன்மீகத்திற்காகவே பிறந்து அதற்காகவே வியாபாரம் செய்த சமூதாயம் நகரத்தார் சமூதாயம். மூன்று தலைமுறை வேதத்தையும், கோயில்களையும் பாதுகாத்த சமூதாயம் நகரத்தார் சமூதாயம். 

காசி பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆன்மீக பணியாற்றியவர்கள் நகரத்தார் சமூதாயம். இத்தகைய பெருமை மிகுந்த நகரத்தார் சமூதாயம் தாழ்வுக்கு திராவிடம்தான் காரணம்தான். திராவிட இயக்கத்தால் ஆன்மீகம் குறைந்ததால்தான் நகரத்தார் சமூதாயம் தாழ்ந்தது. காசி தமிழ் சங்கமத்திற்கு வித்திட்டவர் ஆளுநர் ஆர்.என்.ரவி நகரத்தாரின் தாழ்வுக்கு காரணமே திராவிடம் தான். ஆன்மீகம் குறைந்து திராவிடம் அதிகமாக காரணமாகவே அவர்கள் இந்த நிலைக்கு வந்துள்ளனர். காசி தமிழ் சங்கத்துக்கு வித்திட்டவர் தமிழக ஆளுநர் ஆரன் ரவி. 

ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, இந்தியாவில் காசி பல ஆண்டுகளாக ஆன்மீக தளமாக விளங்குகிறது. 40000 தமிழக மக்கள் காசியில் வாழ்ந்து வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் காசியிடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். பாரத் ரிஷிகளால் உருவாக்கப்பட்ட போது சனாதன தர்மத்தை மட்டும் வழங்கவில்லை. காசி நமது பாரதத்தின் ஆன்மீக ஈர்ப்பு மையமாகும்.

இது நமது நாட்டின் பாரம்பரியம். பாரதம் நமது ரிஷிகளால் உருவாக்கப்பட்டது. மேலும் ரிஷிகள் சனாதன தர்மத்தை மட்டுமல்லாது நாடு முழுவதும் ஒரு கட்டமைப்பை உருவாக்கினார்கள். செல்வத்தை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை. துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகு நாம் திசையை இழந்தோம். பாரதத்தின் முக்கிய பலம் சனாதன தர்மத்தைத் தவிர வேறில்லை. பாரதத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு தேசியத் தலைவர் நமக்கு இருக்கிறார். சமூகத்திற்கு நடந்த தவறுகளை திருத்தி அவர் மீண்டும் பாரதத்தை மீட்டு கொண்டு வர முயற்சிக்கிறார். அந்தவகையில் இந்திய வரும்  2047ஆம் ஆண்டில் தன்னிறைவு பெரும் நாடாக மாறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow