Valentines Day 2025 : காதலர் தினத்துக்கு தடை.. SINGLES-க்கு இனிப்பான செய்தி
Valentines Day 2025 : உலகில் லட்சக்கணக்கான மக்கள் காதலர் தினத்தை வாரக்கணக்காக கொண்டாடி வரும் நிலையில், சில நாடுகளில் மட்டும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பும், தடைகளும் இருந்து வருகிறது. காதலர் தினத்தை தடை செய்துள்ள நாடுகள் எவை? இதற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Valentines Day 2025 : நீரின்றி அமையாது உலகு உண்மைதான். அதேமாதிரி காதலின்றி அமையாது உலகுன்னு சொல்றாங்க. அது உண்மையா? உண்மைன்னு நீங்க நினைக்கலாம். ஆனா அது உண்மையில்ல என்கிறது ஒரு தரப்பு. ஆமா. காதல கொண்டாடுற தினமான காதலர் தினத்த உலக நாடுகள் அனைத்தும் கொண்டாடல. இப்பயும், இந்த நவீன யுகத்துலயும், காதலர் தினத்த கொண்டாடக்கூடாதுன்னு தடை செஞ்சிருக்க நாடுகளும், அதற்கு எதிர்ப்பு தெரிவிச்சிட்டு வர நாடுகளும் இருக்கதான் செய்யுது.
அப்படி அந்த வரிசையில வர முதல் நாடு, ஈரான். இஸ்லாமியர்கள் அதிகம் இருக்க நாடுதான் ஈரான். இங்க 2009-ம் ஆண்டுல இருந்து காதலர் தினத்த கொண்டாடுறதே, இல்ல அந்த நாள்ல ரோஜாக்கள், டெடி பியர், சாக்லேட்டுகள் கொடுப்பதே தடை செய்யப்பட்டுச்சு. கடந்த 2021-ம் ஆண்டுல கூட காதலர்கள் தினத்த கொண்டாடுறவங்க கடுமையாக தண்டிக்கப்படுவாங்கன்னு ஈரான் அறிவிச்சுது. காதலர் தினம் மாதிரியான விழாக்கள்னால இஸ்லாமிய கலாச்சாரம் பாதிக்கப்படுவதாக கருதி இந்த போக்க கொண்டிருக்கு ஈரான்.
லிஸ்ட்ல இரண்டாவதா இருக்க நாடு சவுதி அரேபியா.. இந்த நாட்டுலையும் பெருவாரியான மக்கள் இஸ்லாமியர்கள் என்பதால இஸ்லாமிய கலாச்சாரத்த காக்ககும்னு இங்க 2008-ம் ஆண்டுல காதலர் தினம் கொண்டாட கூடாதுன்னு அறிவிக்கப்பட்டுச்சு. இந்த தடைக்கு அப்புறம் எங்க ஒரு சின்ன ரோஜா செடிய கூட கடைக்காரர்கள் விற்று வந்தாலும் அத பறிமுதல் செஞ்சிட்டு வந்தாங்க அந்த நாட்டு போலீஸ். இதுமட்டும் இல்லாம, 2014-ம் ஆண்டுல காதலர் தினத்த கொண்டாடுனதால 39 பேரை சிறையில் அடைச்சிருக்கு அந்த நாடு. ஆனா 2018-ம் ஆண்டுல ஒரு மூத்த மத குரு காதலர் தினம் குர்ரானுக்கு எதிரானது இல்லன்னு சொன்னதால இந்த மாதிரி காதலர் தினத்துக்கு சம்பந்தமான பொருட்கள பறிமுதல் செய்றத காவல்துறையினர் கைவிட்டுட்டாங்க. ஆனா இன்னும் காதலர் தினத்துக்கான தடை சட்டப்படி அங்க நீக்கப்படல.
மூன்றாவது இந்தோனேசியா... இந்தோனேசியா மாதிரியான ஒரு நாட்டுல காதலர் தினத்துக்கு தடையா..? அப்படின்னு நீங்க ஷாக் ஆகலாம்.. அங்க அதிகாரப்பூர்வமான தடை இல்லனாலும், சுராபையா, மக்காச்சர் போன்ற பகுதிகள்ல இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமா இருக்குறதுனால அங்க காதலர் தினத்துக்கு தடை விதிக்கணும்னு போராட்டம்லாம் நடந்திருக்கு.
நான்காவது மலேசியா... சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகள்ள பாரம்பரியமா காதலர் தினம் கொண்டாடப்பட்றதில்ல சரி... ஆனா மலேசியாவுல இது மாதிரியான ஒரு தடை இருக்குறது பலருக்கும் ஆச்சரியத்த தான் கொடுக்குது. அதாவது 2005-ம் ஆண்டுல இஸ்லாமிய அமைப்பு காதலர் தினத்த கொண்டாடக்கூடாதுன்னு ஒரு அறிவிப்பு வெளியிட்டுச்சு. அதுல காதலர் தினம் இளைஞர்கள சீரழிக்கிறதாகவும், இதுனால பொது இடங்கள்ல காதல வெளிப்படுத்தினா கைது கூட செய்யப்படுவாங்கன்னு அறிவிக்கப்பட்டுச்சு. இதனால, மலேசியாவுல வாழுற பெரும்பாலான மக்கள் காதலர் தினத்த கொண்டாடுறது இல்ல.
ஐந்தாவது பாகிஸ்தான்.. நம்மளோட அண்டை நாடான பாகிஸ்தான்ல கூட காதலர் தினம் கொண்டாடப்படுறதில்லை. கடந்த 2017-ம் ஆண்டுல இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் காதலர் தினம் மேற்கத்திய கலாச்சாரத்துல இருந்து வந்ததுன்னும், இது இஸ்லாமோட போதனைகளுக்கு எதிரானதுன்னும், இதனால காதலர் தினத்த கொண்டாடக்கூடதுன்னும் ஒரு வழக்குல தீர்ப்பு வழங்கியிருந்தது.
என்னதான் இப்படி தடை விதிச்சாலும் காதலுக்கு ஏது மொழி, இனம், மதம், நாடுன்னு கேட்டு காதலர் தினத்த காதலர்கள் இன்னும் கொண்டாடிட்டு வராங்க. ஆனா இன்னொரு பக்கம் பிப்ரவரி 14-ம் தேதி மட்டும் காதலர் தினத்துக்கு தடை போட்டிருக்க நாடுகளுக்கு போயிடலாமானு முரட்டு சிங்கிள்ஸ் சங்கம் திட்டம் தீட்டிட்டுதான் இருக்காங்க.
What's Your Reaction?






