சட்டமன்றத் தேர்தல்: மகாராஷ்டிரா, ஜாா்க்கண்ட் மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை 

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும் நிலையில் 9 மணி முதல் முன்னிலை நிலவரம் வெளியாகும்.

Nov 23, 2024 - 20:03
Nov 23, 2024 - 22:29
 0
சட்டமன்றத் தேர்தல்: மகாராஷ்டிரா, ஜாா்க்கண்ட் மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை 

மகாராஷ்டிரா மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கி நடைபெறுகிறது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 9.70 கோடி போ் வாக்களிக்க தகுதிபெற்ற இத்தோ்தலில் 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 1995ம் ஆண்டுக்கு பிறகு சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.

ஆளும் ‘மகாயுதி’கூட்டணியில் பாஜக 149 தொகுதிகளிலும், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 81 தொகுதிகளிலும், துணை முதலமைச்சர் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளில் போட்டியிட்டன.

எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் 101, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 95, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 86 தொகுதிகளில் களம்கண்டன. இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் போட்டியிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் பல அரசியல் மாற்றங்களைக் கண்ட மாநிலம் என்பதால், தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் பெரிதும் எதிா்பாா்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும் நிலையில் 9 மணி முதல் முன்னிலை நிலவரம் வெளியாகும். பிற்பகலில் இரு மாநிலங்களை ஆளும் கட்சிகள் எவை என்பது குறித்து தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow