ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? பரபரப்பான வாக்கு எண்ணிக்கை.. ஜேஎம்எம் முன்னிலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா முன்னிலை வகித்து வருகிறது.

Nov 23, 2024 - 23:40
Nov 23, 2024 - 23:45
 0
ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? பரபரப்பான வாக்கு எண்ணிக்கை.. ஜேஎம்எம் முன்னிலை
ராகுல் காந்தி - ஹேமந்த் சோரன்

ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளா்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சோ்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. 

கடந்த 2000-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் உருவானதில் இருந்து சட்டப் பேரவைத் தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும். மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட்டின் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68 தொகுதிகளிலும், அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் 10 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி ஓரிடத்தில் களம் கண்டன. இதில் முதலமைச்சரும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா செயல் தலைவருமான ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன், மாநில பாஜக தலைவா் பாபுலால் மராண்டி, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் கட்சித் தலைவா் சுதேஷ் மகதோ உள்பட மொத்தம் ஆயிரத்து 211 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஜாா்க்கண்டில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 30 இடங்களில் வென்றது. 

அக்கட்சி தலைமையிலான கூட்டணி 47 இடங்களுடன் பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 25 இடங்களே கிடைத்தது. இந்த நிலையில், ஆட்சியை கைப்பற்ற ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இதனிடையே இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, காலை 10 மணி நிலவரப்படி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. தொடர்ந்து, பாஜக 28 தொகுதிகளிலும், மற்றவை இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. மேலும், ஜார்க்கண்டில் யாரு ஆட்சி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow