"யாருக்கு ஆட்சி?" ஜார்க்கண்ட் உச்சகட்ட பரபரப்பு..!! | Jharkhand Assembly election
முதலமைச்சரும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா செயல் தலைவருமான ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன், மாநில பாஜக தலைவா் பாபுலால் மராண்டி, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் கட்சித் தலைவா் சுதேஷ் மகதோ உள்பட மொத்தம் ஆயிரத்து 211 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளா்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சோ்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2000-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் உருவானதில் இருந்து சட்டப் பேரவைத் தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.
மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட்டின் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
What's Your Reaction?






