மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. தவெக நிர்வாகிகளோடு விஜய் சந்திப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் 19 கட்சி மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.முன்னதாக மாவட்ட பொறுப்பாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய், 2026 தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை பலப்படுத்தி வருகிறார். இதற்காக தவெக 120 கட்சி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, இதுவரை 95 கட்சி மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து விஜய் அறிவித்தார். மீதமுள்ள 25 மாவட்டங்களில் 19 மாவட்டங்களின் புதிய நிர்வாகிகள் பட்டியலை இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் வெளியிட்டார்.
முன்னதாக தேர்ந்தெடுக்கப்படும் 19 கட்சி மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் தனித்தனியே சந்தித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதனால் பனையூர் அலுவலகம் பரபரப்பாகி உள்ள நிலையில், அறக்கட்டளைக்கு உதவி கேட்டு வந்த பெண்ணிடம் தவெகவினர் வாக்குவாதம் செய்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்யை சந்திப்பதற்கு அனுமதி கேட்டபோது, அந்தப் பெண்ணை உள்ளே செல்வதற்கு அனுமதி கொடுக்கவில்லையாம். மேலும் பேட்டி கொடுக்க வந்த பெண்ணை பேசவிடாமல். தமிழக வெற்றிக் கழகம், என தவெகவினர் கத்தியதால் பேட்டி கொடுக்க வந்த பெண் பேட்டி கொடுக்காமல் சென்றுள்ளார்.
What's Your Reaction?






