தமிழ்நாடு

ரூபாய் குறியீடு மாற்றம்... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு மாற்றம் செய்யப்பட்டு இருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலச்சினையில் 'ரூ' என்ற தமிழ்வார்த்தையை தமிழ்நாடு அரசு முன்னிலைப்படுத்தியிருக்கிறது. ரூபாய் குறியீட்டை மாற்றியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

ரூபாய் குறியீடு மாற்றம்...  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்
ரூபாய் குறியீடு மாற்றம்.. அண்ணாமலை விமர்சனம்

தமிழகத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில், தேவநாகரி எழுத்தில் உள்ள மத்திய அரசின் ரூபாய் குறியீட்டை மாற்றி, ‘ரூ’ என்ற தமிழ் எழுத்துடன் கூடிய இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

லட்சணையில், ரூபாய் குறியீட்டுக்குப் பதிலாக தமிழில் ரூ என்று மாற்றப்பட்டுள்ளது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் கண்டுபிடித்தார் என்பதற்காக பயன்படுத்த முடியாது என்றும், ₹ இந்த குறியீடு தேவநாகரிக எழுத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் மாநில திட்டக்குழுவின் நிர்வாக துணைதலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் கூறியிருந்தார். 

இது தொடர்பாக தனது எக்ஸ்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, திட்டக்குழு துணைத்தலைவர் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி தமிழக முதலமைச்சர், தன்னை இப்படிப்பட்ட முட்டாள்களால் சூழ்ந்து கொண்டுள்ளார் என்று கடுமை காட்டியுள்ளார். வெற்று விளம்பரங்களும், திறமையின்மையை மறைக்க அர்த்தமற்ற முடிவுகளுமே திமுகவின் கடந்த நான்கு ஆண்டுகளின் சுருக்கமாக உள்ளதாகவும், தந்தை கருணாநிதி ஆதரித்ததை மகன் ஸ்டாலின் நிராகரிக்கிறார் என்றும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.