ஆஸ்கர் 2025 5 விருதுகளை அள்ளிய அனோரா! அப்படி என்ன ஸ்பெஷல்?
ரொமாண்டிக் காமெடி ஜானரில் வெளியான அனோரா திரைப்படம், ஆஸ்கரில் 5 விருதுகளை வென்று அசத்தியுள்ளது. ரசிகர்களை கிறங்க வைத்த இந்தப் படத்தின் ஸ்பெஷல் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

2025ம் ஆண்டுக்கான 97வது ஆஸ்கர் விருதுகள் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. மொத்தம் 23 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், அனோரா திரைப்படம் 5 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. எமிலியா பெரஸ் திரைப்படம் அதிகபட்சமாக 11 விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை ஓவர்டேக் செய்துள்ளது அனோரா. ஷான் பேக்கர் இயக்கிய இந்தப் படம் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதாவது, செக்ஸ் ஒர்க்கரான அனி மிகீவா என்ற 23 வயது இளம்பெண், கோடீஸ்வர வீட்டு பையனான வான்யா ஜகாரோவ் என்ற இளைஞனை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், இது வான்யா ஜகாரோவ்-ன் குடும்பத்துக்கு தெரியவர, இந்த திருமணத்தை ஏற்க மறுக்கின்றனர். இந்த ஜோடியை பிரிக்க வான்யா ஜகாரோவ் குடும்பம் படுற பாடும், இறுதியாக என்ன நடந்ததும் என்பது தான் அனோரா படத்தின் கதை. படம் முழுக்க காமெடியை விட காதல் காட்சிகள் அன்லிமிடெட்டாக இருந்ததால், ரசிகர்கள் அனோரா படத்தை கொண்டாடித் தீர்த்தனர். இப்போது 5 ஆஸ்கர் விருதுகளையும் தட்டித் தூக்கியுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை ஆகிய 5 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன. முக்கியமாக இந்தப் படத்தின் இயக்குநர் ஷான் பாக்கருக்கு, திரைக்கதை, எடிட்டிங், இயக்குநர், சிறந்த திரைப்படம் ஆகிய பிரிவுகளில் 4 விருதுகள் கிடைத்துள்ளன. நாயகி மிக்கி மேடிசன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். முன்னதாக பாஃதா (BAFTA) திரைப்பட விழாவிலும், மிக்கி மேடிசன் சிறந்த நடிகைக்கான விருது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஷான் பாக்கரும், நாயகி மிக்கி மேடிசனும் மேடையில் உருக்கமாக பேசியிருந்தனர். இருவருமே பாலியல் தொழிலாளிகளுக்கு நன்றி கூறியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், ஷான் பேக்கர் இயக்கிய அனோரா திரைப்படம் 5 விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை என 5 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன. இதில், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த இயக்குநர் ஆகிய 4 விருதுகளை வென்றார் ஷான் பேக்கர், சிறந்த நடிகைக்கான விருதை மிக்கி மேடிசன் வென்றார்.
What's Your Reaction?






