அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. தமிழிசை உள்ளிட்ட 417 பேர் மீது வழக்குப்பதிவு

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன் மற்றும் பாஜக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Dec 27, 2024 - 10:39
 0
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. தமிழிசை உள்ளிட்ட 417 பேர் மீது வழக்குப்பதிவு
போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட 417 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவரும் அவரது காதலனான மாணவன் ஒருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தனிமையில் இருப்பதை தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்த ஞானசேகரன், மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, அந்த மாணவி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

ஆதாரங்களின் அடிப்படையில் ஞானசேகரனை கைது செய்த காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். திமுக பிரமுகர் ஞானசேகரனுக்கு   இடது கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளதால் நீதிமன்ற காவலில் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள குற்றவாளிகள் சிகிச்சை பிரிவில் (Convict Ward) சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வெளியான முதல் தகவல் அறிக்கையில், தாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன் மற்றும் பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தரவைப்பேன் என ஞானசேகரன் மிரட்டியதாகவும், அலைபேசியில் இருந்த தனது தந்தை செல்போன் எண்ணை எடுத்துக் கொண்டு அவருக்கு வீடியோ அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலு கட்டாயமாக தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று  (டிச.27) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் பாஜக-வினர் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார் தமிழிசை செளந்தரராஜன் உட்பட பாஜகவினர் பலரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.  

இந்நிலையில், பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை செளந்தரராஜன், கரு.நாகராஜன் உள்ளிட்ட 417 நபர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow