கூட்டணிக்கு Ok சொன்ன பாஜக? மத்திய அமைச்சர் பதவி கேட்ட அதிமுக? சிவி சண்முகம் vs தம்பிதுரை!
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்சௌலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி இருப்பது தான் தற்போதைய அரசியலில் ஹாட் டாப்பிக். ஒருவழியாக பாஜகவுடன் - அதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் டீலிங்கே வேறு என்கிறது அரசியல் பட்சி. 40 நிமிட சந்திப்பில் அதிமுக வைத்த ஒற்றை டிமாண் கேட்டு பாஜக சொன்னது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் சந்தித்துள்ளனர். குறிப்பாக எடப்பாடியும் அமித்ஷாவும் தனியாக சுமார் 15 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அதிமுக – பாஜக கூட்டணியை மீண்டும் அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இக்கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? பாஜக மாநில தலைவரை மாற்ற கோரிக்கை, 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகம் என பல விஷயங்கள் அலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் முடிவாக, தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே தொடர்வார் எனவும், அப்படி இருக்கும் பட்சத்தில் பாஜக மாநில தலைவரை யார் என்பதில் இபிஎஸ் கவனம் செலுத்தக்கூடாது எனவும் டீலிங் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் தாண்டி புதிதாக ஒரு டிமாண்டை அதிமுக வைத்ததாக காதைக் கடிக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
அது என்ன புது டீலிங் என விசாரித்த போது தான், அதிமுகவில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி என முணுமுணுத்தனர் விவரமறிந்தவர்கள். இதற்கு அமித்ஷா டிக் அடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ராஜ்யசபாவில் சீனியர்களான தம்பிதுரையும், சிவி சண்முகமும் உள்ளனர். இவர்களில் தம்பிதுரையின் பதவி காலம் ஓரிரு மாதங்களில் முடிவடைய உள்ளது. இதனால் பாஜக தரப் போகும் மத்திய இணை அமைச்சர் பதவி சிவி சண்முகத்துக்குதான் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
ஆனால், தமிழ்நாடு அரசியலில் குறியாக இருக்கும் சி.வி. சண்முகமோ 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக எம்.எல்.ஏ ஆகி காலரை தூக்கிவிட்டு கெத்தாக நடக்கவேண்டும் என ப்ளான் செய்து வருகிறார். மேலும், தனது சொந்த ஊர் அமைந்துள்ள மயிலம் தொகுதியிலேயே போட்டியிட முடிவு செய்துள்ளதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக திமுக அமைச்சர் பொன்முடியை இவர் ரசிகசியமாக சந்தித்ததாக கூறப்பட்டது. அந்த சந்திப்பில், தானும், அமைச்சர் பொன்முடியின் மகனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி என்பது மதில் மேல் பூனை போல ஆகிவிடுமே என்ற சந்தேகம் எழுந்ததால், ’மாண்புமிகுவாகிய நான் விழுப்புரம் தொகுதிய எடுத்துக்குறேன், மாஜி ஆகிய நீ மயிலம் தொகுதியை எடுத்துக்கோ, இரண்டுபேரும் சோபிக்கலாம்’ என பலே திட்டம் ஒன்றை தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், சி.வி.சண்முகம் மாநில அரசியலில் சோபிக்க நினைப்பதால், அதிமுகவில் இருந்து யார் மத்திய இணை அமைச்சர் பதவியில் ஜொலிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்..
What's Your Reaction?






