டெண்டரில் பாரபட்சம்? போரட்டத்தை கையிலெடுக்கும் ஐ.என்.டி.யு.சி!
மழை நீர் வடிகால் கட்டுவது, சிறு பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில், அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை, மாநகராட்சியில் ஒப்பந்தங்கள் வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டக் கூடாது என்றும், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐ.என்.டி யு .சி. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாவட்ட காங்கிரஸ், ஐ.என்.டி. யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் பாசமலர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாங்கள் கோவை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் கட்டுவது, சிறு பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தங்கள் எடுத்து செய்து வருகிறோம். எங்களை நம்பி தொழிலாளர்களின் குடும்பங்கள் உள்ளனர்.
இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களின் ஒப்பந்ததாரர்கள் எடுத்த பணிகளுக்கு அதிகாரிகள் பணி ஆணை கொடுக்காமல் இழுத்து அடித்து வருகிறார்கள். இதனால் எங்களை நம்பி உள்ள தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஒரு வருட காலம் இந்த நிலை நீடிக்கிறது சுமார் 2 கோடி மதிப்பிலான ஒப்பந்த பணிகள் எங்களுக்கு வழங்குவதில் இருந்து மாற்றி வேறு நபர்களுக்கு கொடுத்து உள்ளனர். இணையதளம் மூலமாக 30 க்கும் மேற்பட்ட பணிகளை, விதிகளுக்கு மாறாக செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதலமைச்சர் தலைமை நிலைய செயலாளர், ஆகியோருக்கு புகார் மனு அளித்து உள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் பாரபட்சம் காட்டக் கூடாது. தமிழக முதலமைச்சர் இதுகுறித்து குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
What's Your Reaction?






