விஜய் போட்ட உத்தரவு.. பிரச்சனைகளை தேடிச்செல்லும் தவெகவினர்.. அடுத்தக்கட்ட மூவ்!

கட்சியின் முதல் பொதுக்குழுவை கூட்டுவதற்கு முன் தவெக நிர்வாகிகளுக்கு ஒரு புதிய அசைன்மெண்ட்டை அக்கட்சி தலைவர் விஜய் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர் கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் என்ன? தவெகவின் அடுத்தக்கட்ட மூவ் என்ன? என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..

Mar 26, 2025 - 15:37
 0
விஜய் போட்ட உத்தரவு.. பிரச்சனைகளை தேடிச்செல்லும் தவெகவினர்.. அடுத்தக்கட்ட மூவ்!

தமிழக சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. அதை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவருகின்றன. புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யும் தனது முதல் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டிவருகிறார். மாநாடு, பூத் கமிட்டி அமைப்பது, நிர்வாகிகள் நியமனம், இரண்டாம் ஆண்டு விழா என கட்சியின் அடிப்படை கட்டமைப்புகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. 

இந்த நிலையில் தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் மார்ச் 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டு, கட்சியின் சட்ட திட்ட விதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது ஒருபுறம் இருக்க, தவெகவின் லோக்கல் அரசியலில் உள்ள பிரச்சனைகள், காசுக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளை என அனைத்தையும் விஜய்யிடம் புகாரளிக்க ஒரு டீம் கிளம்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது கட்சியின் செயல்பாடு, கூட்டணி நிலைப்பாடு குறித்தும் நிர்வாகிகளிடம் தவெக தலைவர் விஜய் கருத்து கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொதுக்குழுவிற்கு வரும் நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் ஒரு ஸ்பெஷல் அசைன்மெண்ட்டை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 234 தொகுதிகளில் உள்ள 5 முக்கிய பிரச்சனைகள் என்ன? மக்கள் வைத்திருக்கும் கோரிக்கை என்ன? கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் நிரைவேற்றப்படாமல் இருக்கும் வாக்குறுதிகள் எவை என்பவை குறித்து ஒரு ரிப்போர்ட் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், இந்த பயணத்தின் போது நிர்வாகிகள் கொடுத்த ரிப்போர்ட்டை வைத்து மக்கள் மத்தியில் அவர் பேசயிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Work from home அரசியலை செய்துவருவதாக விமர்சிக்கப்பட்ட விஜய், தற்போது மக்கள் பிரச்சனைகளை கண்டறிவதற்காக போடும் ரூட் அவருக்கு என்ன மாதிரியான ரிசல்ட்டை தரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow