இப்போது எந்த நடுக்கமும் இல்லை.. மைக் சரியாகதான் பிடித்திருக்கிறேன்.. நடிகர் விஷால்
’மத கஜ ராஜா’படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க நடிகர் விஷால், இப்போது எந்த நடுக்கமும் இல்லை என்றும் சாகும் வரை ரசிகர்களின் அன்பை மறக்கமாட்டேன் என்றும் பேசியுள்ளார்.
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் ’மத கஜ ராஜா’. 2013-ஆம் ஆண்டே வெளியீட்டுக்கு தயாராக இருந்த இந்த திரைப்படம் தயாரிப்பாளரின் நிதி சிக்கலால் 12 ஆண்டுகள் கழித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டார்.
அப்போது, அவர் மைக்கை பிடித்த போது கைகள் நடுங்கியது. அதோடு அவர் கால்களும் நடுங்கி நிற்க முடியாமல் நின்றார். இவரின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் ‘விஷாலுக்கு என்ன தான் ஆச்சு’ என்று கேள்வி எழுப்பினார்கள். மேலும், நடிகர் விஷால் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வந்தது.
இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் விஷால் பதிலளித்துள்ளார். நேற்று ’மத கஜ ராஜா’படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க நடிகர் விஷால் பார்க்க வந்தார். அப்போது பேசிய அவர், "நிறைய பேர் இவர் மூன்று மாதம் ஆறு மாதம் படப்பிடிப்பிற்கு வரமாட்டார் என்று கூறினார்கள். இப்போது அந்தமாதிரி எந்த நடுக்கமும் இல்லை. மைக் சரியாக தான் பிடித்திருக்கிறேன். எல்லோரும் இந்த படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். சாகும் வரை உங்கள் அன்பை நான் மறக்கமாட்டேன்” என்று கூறினார்.
இதுஒருபுறம் இருக்க மற்றொரு புறம் பாடகி சுசித்ரா, நடிகர் விஷால் மீது சரமாரி புகார்களை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், "விஷால் நடுக்கத்திற்கு போதைப்பொருள் தான் காரணம். அவரை பார்த்து ரசிகர்கள் வேண்டுமானால் கவலைப்படலாம். ஆனால், நான் கவலைப்படமாட்டேன். அவருக்கு இது தேவைதான். நன்றாக அனுபவிக்கட்டும். என் வீட்டிற்கு கணவன் இல்லாத நேரத்தில் இவர் வந்திருக்கிறார் .
நன்றாக குடித்துவிட்டு என் வீட்டு கதவை தட்டியவர். என் கணவர் இல்லை என்று சொன்ன பின்பும் கூட விடாமல் உள்ளே வர முயன்று இருக்கிறார். இவர் எல்லாம் என்ன ஜென்மம். நான் திட்டி அசிங்கப்படுத்தி அனுப்பிய பின்பே அவர் அங்கிருந்து சென்றார். அவரை பற்றி நீங்கள் வேண்டுமானால் வருத்தம் அடையலாம். ஆனால் நான் கவலைப்பட மாட்டேன். அவருக்கு இது தேவைதான். அவர் இத்தனை காலம் செய்த விஷயங்களுக்கு இப்போது அனுபவிக்கிறார்” என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?