அதிமுகவை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்- அமைச்சர் சாமிநாதன்
ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அதிமுகவை தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் நிலையில் இந்த தேர்தலிலும் புறக்கணித்து விடுவார்கள் என்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கத்தில் பொங்கல் விழாவையொட்டி தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளை பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழா கலை நிகழ்ச்சிகளை நாளை (ஜன 13) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிலையில் அங்கு நடைபெற்று வரும் பணிகளை செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னையில் மட்டும் 18 இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், "ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் தொடர்ச்சியாக அதிமுகவை புறக்கணித்துள்ளனர். அது கடந்த இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி முன்னதாக நடந்த நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி அந்த தொகுதி மக்கள் அதிமுகவை புறக்கணித்துள்ளனர். அதன் காரணமாக அதிமுக இந்த தேர்தலை புறக்கணிக்கிறது என்று கூறினார்.
தொடர்ந்து, ஜனநாயக படுகொலை நடக்கும் என அதிமுக கூறுவது பொதுவாக சொல்லக்கூடிய காரணம் தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதனால் நிச்சயமாக மக்களின் ஆதரவு திமுகவிற்கு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை.. சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்..!
நாளை மறுநாள் (ஜன 14) தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. பொங்கள் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில், இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது குறித்து அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் மக்கள் சோகத்தில் உள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படாதது குறித்து பல கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். இதைத்தொடர்ந்து, நிதி நெருக்கடியின் காரணமாகதான் இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகையை வழங்கவில்லை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இதனை ஈடு செய்யும் விதாமாக மகளிர் உரிமைத் தொகை முன்னதாகவே பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
What's Your Reaction?