Bloody Beggar Review: படத்துல அதெல்லாம் பஞ்சமே இல்ல... கவினின் ப்ளடி பெக்கர் டிவிட்டர் விமர்சனம்!
கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
சென்னை: நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ள ப்ளடி பெக்கர் படத்தில், கவின் ஹீரோவாக நடித்துள்ளார். டாடா, ஸ்டார் வரிசையில் கவின் நடித்த இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. கவின் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்துள்ள ப்ளடி பெக்கர், டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லரும் ரொம்பவே வித்தியாசமாக இருந்ததால், கவின் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான ப்ளடி பெக்கர் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
“ப்ளடி பெக்கர் கண்டிப்பா தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான படம். கவின் பிச்சைக்காரனாக உடம்பு முழுவதும் கருப்பு சாயம் பூசிக்கொண்டு தன் உயிரை காப்பாற்ற போராடும் காட்சிகள் எல்லாம் சிரிக்கவும் ஆச்சர்யபடவும் வைக்கிறது. குறிப்பாக கவின் முக பாவனை மூலம் பல காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை இடைவேளை வந்ததும் தெரியவில்லை. விறுவிறுப்பாக பஞ்சம் இல்லாமல் நகர்கிறது” என சினி டைம் தளம் விமர்சனம் செய்துள்ளது.
அதேபோல், சோஷியல் மீடியா ட்ராக்கர் அமுதபாரதி தனது டிவிட்டர் விமர்சனத்தில், ப்ளடி பெக்கர் முதல் பாதி நன்றாக வந்துள்ளதாகவும், கதையில் அனைத்து கேரக்டர்களும் என்ட்ரியாக 40 நிமிடங்கள் ஆகிவிட்டன. கவின் பிச்சைக்காரனாக நடித்துள்ள முதல் 20 நிமிடங்கள் செம ஃபன் மொமண்ட்ஸ், அதன்பிறகு தான் மற்ற கேரக்டர்கள் அறிமுகமாகின்றன. ப்ளடி பெக்கர் கேரக்டரில் கவின் பக்காவாக செட் ஆகிவிட்டார். இடைவேளையில் இருந்து த்ரில்லர் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன், ப்ளடி பெக்கர் திரைப்படம் தமிழில் ரொம்ப தைரியமான அட்டெம்ப்ட். இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் வித்தியாசமான கதையுடன் அறிமுகமாகியுள்ளார். கவினின் நடிப்பும் பெர்ஃபாமன்ஸும் அவுட்ஸ்டாண்டிங், பின்னணி இசை படத்துக்கு பலமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இடைவேளை காட்சி காமெடி ப்ளஸ் த்ரில்லர் மொமண்ட் என சொல்லலாம். டார்க் காமெடியில் ப்ளடி பெக்கர் அசரவைக்கிறது என விமர்சித்துள்ளார். ஒட்டுமொத்தமாக ப்ளடி பெக்கர் படத்துக்கு ஓரளவு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. சிவகார்த்திகேயனின் அமரன், துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படங்களுடன், கவினின் ப்ளடி பெக்கர் படத்துக்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?