Devara Review: Jr NTR-ன் தேவரா ரிலீஸ்... ஏமிரா இதி..? கிடா வெட்டிய ரசிகர்கள்... படம் எப்படி இருக்கு?
Devara Movie Review in Tamil : ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடித்துள்ள தேவரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

Devara Movie Review in Tamil : கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஜூனியர் என்டிஆருடன் ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ், கலையரசன், சையிப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக ரிலீஸான தேவராவை டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இப்படத்தின் FDFS அதிகாலை 4 மணிக்கே திரையிடப்பட்டது.
தேவரா பிளாக் பஸ்டர் திரைப்படம் என பாராட்டியுள்ள Let's X OTT GLOBAL நிறுவனம், 3.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளது. இப்படத்தின் முதல் பாதி மென்டல் மாஸ், ‘ஃபயர்’ பாடலில் ஜூனியர் என்டிஆரும் அனிருத்தும் தெறிக்கவிட்டுள்ளனர். விஷுவலாக இந்தப் பாடல் செம ட்ரீட். இடைவேளை காட்சி செம பீக், தரமான ஆக்ஷன் என குறிப்பிட்டுள்ளது. இரண்டாம் பாதியில் பல காட்சிகள் யூகிக்கக் கூடியதாக உள்ளது. கடைசி 30 நிமிடங்களும் கிளைமேக்ஸும் அருமையாக வந்துள்ளது. பாகுபலி முதல் பாகத்தில் ட்விஸ்ட் வைத்ததை போல, தேவரா முதல் பாகமும் சஸ்பென்ஸுடன் முடிவது சூப்பர் என விமர்சனம் செய்துள்ளது.
தேவரா ஆவரேஜ் கமர்சியல் மூவி என CK Review தளம் குறிப்பிட்டுள்ளது. ஜூனியர் என்டிஆரின் நடிப்பும் அனிருத்தின் இசையும் மட்டுமே படத்துக்கு பலமாக உள்ளது. ஜான்வி கபூர் ரோல் டம்மியாகவும், சையிப் அலிகான் கேரக்டர் சுமாராகவும் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற சப்போர்ட்டிங் கேரக்டர் எல்லாம் பெரிதாக ரசிக்க முடியவில்லை. ஒருசில சண்டைக் காட்சிகள் மட்டுமே ரசிக்க முடிகிறது. படத்தின் கதையையும் அடுத்தடுத்த காட்சிகளையும் எளிதாக கணிக்க முடிகிறது, கிளைமேக்ஸ் சுத்த வேஸ்ட் என விமர்சனம் செய்துள்ளது.
நெட்டிசன் ஒருவர் தேவரா படத்துக்கு 3.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். மிர்ச்சி படத்துக்குப் பின்னர் கொரட்டலா சிவாவின் பெஸ்ட் தேவரா தான். ஜூனியர் என்டிஆர் மரண மாஸ் காட்டியுள்ளார், அனிருத்தின் பிஜிஎம் தரம். ஜான்வி கபூர் ரசிக்க மட்டும் ஓக்கே, முதல் பாதி நன்றாக இருந்தாலும், இரண்டாம் பாதி சுமார் ரகம் தான். கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் சூப்பராக வந்துள்ளன என ட்வீட் செய்துள்ளார்.
அதேபோல், சினிமா ட்ராக்கர் கிறிஸ்டோபர் கனகராஜ், தேவரா ஆவரேஜ் கமர்சியல் மூவி என விமர்சித்துள்ளார். ஜூனியர் என்டிஆர், அனிருத் இசை, ஒருசில ஆக்ஷன் சீன்ஸ் சூப்பர். கதை யூகிக்கக் கூடியது தான் என விமர்சனம் கொடுத்துள்ளார்.
இதனிடையே இசையமைப்பாளர் அனிருத் தேவரா படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார். முக்கியமாக தேவரா ரிலீஸை ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் கிடா வெட்டி கொண்டாடியதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






