Lucky Baskhar BoxOffice: துல்கர் சல்மான் காட்டுல வசூல் மழை... லக்கி பாஸ்கர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியானது. இந்தப் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் குறித்து இப்போது பார்க்கலாம்.

Nov 1, 2024 - 17:35
 0
Lucky Baskhar BoxOffice: துல்கர் சல்மான் காட்டுல வசூல் மழை... லக்கி பாஸ்கர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!
லக்கி பாஸ்கர் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர். தீபாவளி ஸ்பெஷலாக நேற்று வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. பீரியட் ஜானரில் 1992 ஸ்கேம்-ஐ பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது லக்கி பாஸ்கர். அதாவது பங்குச் சந்தைகளில் மிகப் பெரிய மோசடி செய்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் ஹர்ஷத் மேத்தா. உலகையே அதிர வைத்த இந்த ஸ்கேம் நடைபெற வங்கிகளும் காரணமாக அமைந்தன. அதன்படி வங்கிகளின் பின்னணியில் அங்கு நடைபெற்ற மோசடிகளை அடிப்படையாக வைத்து லக்கி பாஸ்கர் படத்தை இயக்கியுள்ளார் வெங்கி அட்லூரி.    

வங்கியில் வேலை பார்க்கும் துல்கர் சல்மானுக்கு சம்பளம் குறைவு, அதோடு கடனும் அதிகமாக இருக்க, ஹர்ஷத் மேத்தா கும்பலுடன் இணைந்து மோசடியில் ஈடுபடுகிறார். ஒருகட்டத்தில் 100 கோடி ரூபாய் வரை சம்பாதித்து சிபிஐ-யிடம் சிக்க, அதன்பின்னர் என்ன ஆனது என்பது தான் லக்கி பாஸ்கர் ஒன்லைன். இந்தப் படத்தின் இடைவேளை காட்சி, க்ளைமேக்ஸ் ஆகியவை கூஸ்பம்ஸ் மொமண்ட் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். அதேபோல், துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி ஆகியோரின் நடிப்பும் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. தெலுங்கில் உருவான லக்கி பாஸ்கர் தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்திய படமாக ரிலீஸாகியுள்ளது. இதனால் தெலுங்கு மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் லக்கி பாஸ்கர் வசூலில் மிரட்டி வருகிறது. அதன்படி, லக்கி பாஸ்கர் முதல் நாளில் 10 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 7 கோடி ரூபாய் வரையிலும், தமிழ்நாட்டில் ஒரு கோடியும் கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லக்கி பாஸ்கருக்கு பாசிட்டிவான விமர்சனம் கிடைத்துள்ளதால், அடுத்தடுத்த நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தீபாவளிக்கு வெளியான சிவகார்த்திகேயனின் அமரன், முதல் நாளில் 35 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. அதனையடுத்து துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் தான் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கெத்து காட்டியுள்ளது. கவின் நடிப்பில் வெளியான ப்ளடி பெக்கர், ஜெயம் ரவியின் பிரதர் படங்கள் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை எனத் தெரிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow