Actor Soori Net Worth : அப்போ கூட்டத்துல ஒருத்தன்… இப்போ ஹீரோ… சூரியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

Actor Soori Net Worth & Salary Details in 2024 : நடிகர் சூரி இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூரியின் சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.

Aug 27, 2024 - 17:37
Aug 27, 2024 - 18:17
 0
Actor Soori Net Worth : அப்போ கூட்டத்துல ஒருத்தன்… இப்போ ஹீரோ… சூரியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?
Actor Soori Net Worth & Salary Details in 2024

Actor Soori Net Worth & Salary Details in 2024 : சென்னை: சினிமாவில் பல வருட போராட்டங்களுக்குப் பின்னர் ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார் சூரி. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாக வந்து சென்றவர் சூரி. மதுரையில் இருந்து சென்னை வந்து எப்படியாவது நடிகனாகிவிட வேண்டும் என தவமாய் தவம் கிடந்துள்ளார். அதற்கு பலனாக வெண்ணிலா கபடி குழு படத்தில் வரும் பரோட்டா காமெடி சூரிக்கு வாழ்க்கை கொடுத்தது. இந்த ஒரே காமெடியில் உலகம் முழுவதும் பிரபலமானார். 

இதனையடுத்து பல படங்களில் காமெடியனாக நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் சூரி. அதேபோல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடனும் காமெடியில் கலக்கினார். அப்போதெல்லாம் லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சூரி, இப்போது கோடிகளில் புரளுகிறார். வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் சூரி லீடிங் ரோலில் நடிப்பதாக முதல் அறிவிப்பு வெளியான நாள் முதல், அவரது காட்டில் அடை மழை தான்.

விடுதலை படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்த சூரி, கிளைமேக்ஸில் ஆக்ஷனிலும் அசத்தியிருந்தார். அடுத்து அவர் ஹீரோவாக நடித்த கருடன், சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி இன்னொரு மாஸ் ஹிட்டாக அமைந்தது. இந்த இரண்டு படங்களும் சூரியை ஹீரோ மெட்டீரியலாக மாற்றியது எனலாம். அதனால் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிக்கவுள்ளதாக சூரி முடிவெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே சூரி ஹீரோவாக நடித்து கடந்த வாரம் வெளியான கொட்டுக்காளி, விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

மேலும் படிக்க - லால் சலாம் ஓடிடி ரிலீஸ் தேதி… ரசிகர்களை குழப்பிய போஸ்டர்!

அதேநேரம் விரைவில் வெளியாகவுள்ள விடுதலை 2ம் பாகம் சூரிக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறனுடன் இணையவுள்ளாராம் சூரி. இதன் காரணமாக ஆரம்பத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சூரி, தற்போது ஒரு படத்துக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். அதுமட்டும் இல்லாமல் தனது சொந்த ஊரான மதுரையில் 10க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் திறந்துள்ளார், இந்த கடைகள் அனைத்தும் அம்மன் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன.

சூரியின் உணவகங்களை அவரது சகோதரர்கள் கவனித்து வருகின்றனர். இதன் மூலமும் சூரிக்கு லட்சங்களில் வருமானம் கிடைக்கிறது. அதேபோல் ரியல் எஸ்டேட் பிஸினஸிலும் சூரி முதலீடு செய்துள்ளாராம். சென்னை, மதுரையில் சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளன. அதேபோல், BMW, Audi உட்பட 3 சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார் சூரி. இதனடிப்படையில் சூரியின் மொத்த சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் ஒருவனாக சினிமாவில் தலை காட்டிய சூரி, இப்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோவாக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow