Meiyazhagan Review : செம ஃபீல் குட் மூவி... 5 ஸ்டார் ரேட்டிங்... கார்த்தியின் மெய்யழகன் விமர்சனம்!

Meiyazhagan Movie First Review in Tamil : பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் நாளை (செப்.27) திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Sep 26, 2024 - 16:28
Sep 26, 2024 - 17:02
 0
Meiyazhagan Review : செம ஃபீல் குட் மூவி... 5 ஸ்டார் ரேட்டிங்... கார்த்தியின் மெய்யழகன் விமர்சனம்!
மெய்யழகன் விமர்சனம்

Meiyazhagan Movie First Review in Tamil : கார்த்தி, அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. பிரேம்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்த்தை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்நிலையில், மெய்யழகன் பிரிவியூ ஷோவில் பங்கேற்ற பிரபலங்கள் இந்தப் படத்தை பாராட்டியுள்ளனர். மெய்யழகன், ஒரு அட்டகாசமான ஃபீல்குட் டிராமாவாக உருவாகியுள்ளது. நமது முந்தைய தலைமுறை, வரலாறு, அன்பு குறித்து தெரிந்துகொள்வதன் அவசியத்தை பேசுகிறது. 

மெய்யழகன்(Meiyazhagan) கதையை கார்த்தி, அரவிந்த் சாமி இருவரும் இணைந்து சுமப்பதோடு, ரொம்பவே அருமையாக நடித்துள்ளனர். இதற்கு முன் தமிழில் எத்தனையோ இயக்குநர்கள் நாவலில் இருந்து படங்கள் இயக்கியுள்ளனர். ஆனால், இயக்குநர் பிரேம்குமார் மெய்யழகன் படத்தை நாவலை விட சூப்பராக ஸ்க்ரீனில் கொண்டு வந்துள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிக ஆழமாக உணர்ந்து எழுதியுள்ளார் இயக்குநர் பிரேம்குமார். கண்டிப்பாக இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என சினிமா ட்ராக்கர் ராஜசேகர் ட்வீட் செய்துள்ளார்.

அதேபோல் மெய்யழகன்(Meiyazhagan) படத்துக்கு 4.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார் சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா. நமது வேர்களை தேடி திரும்பிச் செல்வது பற்றிய ஒரு சிறப்பான ஃபீல்குட் மூவி மெய்யழகன். கார்த்தி, அரவிந்த் சாமி இருவருமே தங்களது நடிப்பால் ரசிக்க வைக்கின்றனர். அரவிந்த் சாமியின் கரியரில் மெய்யழகன் படத்தில் தான் அவரது கேரக்டர் சூப்பராக கிரியேட் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு படமாக இல்லாமல், ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். கண்டிப்பாக இந்தப் படத்தை பாருங்கள் என ரசிகர்களுக்கு தம்ஸ்அப் கொடுத்துள்ளார். 

மெய்யழகன்(Meiyazhagan) படத்தில் இயக்குநர் பிரேம்குமார் எல்லாவற்றிலும் வாழ்க்கையின் அழகை ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். முக்கியமாக வீட்டிற்கு ஒரு முகம் இருப்பதாகவும், சைக்கிளை ஒரு கேரக்டராகவும் ரசிகர்கள் முன் காட்டியதில் சபாஷ் போட வைக்கிறார். மனித உணர்வுகளை படம்பிடித்துள்ள மெய்யழகன், ஆண்கள் சுதந்திரமாக அழும் ஒரு படைப்பாக உருவாகியுள்ளது. மெய்யழகன் கதைகளைப் பற்றிய கதையாகவும், கடந்த காலத்தை பேசும் ஒன்றாகவும் பார்க்க முடிகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் ஒரு குடும்பத்தின்; குழந்தைப் பருவத்தையும் மறந்த நினைவுகளை எழுப்பும் கதையாகவும் சொல்லலாம். இழந்த உறவுகளின் அழகையும் அரவணைப்பையும் மீண்டும் கண்முன் காட்டியுள்ளது. மெய்யழகன் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என சுதிர் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.  

மெய்யழகன்(Meiyazhagan Review) படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளதோடு, ரசிகர்களுக்கு இது புதிய அனுபவமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow