“இதுக்கு அதுவே பெட்டர்.. விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்கா இல்ல அஜித் டூர் போட்டோவா?” நெட்டிசன்கள் பங்கம்!
அஜித்தின் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில், நெட்டிசன்கள் அதனை பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அஜித்துடன் த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடைபெறுகிறது. பட்ஜெட் உள்ளிட்ட சில பிரச்சினைகள் காரணமாக விடாமுயற்சி படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது அசுர வேகத்தில் விடாமுயற்சி இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மகிழ் திருமேனி. ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாவது வாரத்திற்குள் விடாமுயற்சி ஷூட்டிங் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியதை மேக்கிங் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு அப்டேட்டாக கொடுத்தது படக்குழு. அதன் தொடர்ச்சியாக அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நேற்று வெளியிட்டது. அஜித் ஒரு ட்ராவல் பேக் உடன் ஸ்டைலிஷாக நடந்து வருவது போல இந்த போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘அவர் பாதையில்’ என்ற கேப்ஷனும் இந்த போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. விடாமுயற்சி படம் தொடங்கியதில் இருந்து இதுவரை ஒரு அப்டேட்டை கூட படக்குழு வெளியிட்டது கிடையாது. இதனால் நேற்றைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், அஜித்தின் லுக் தவிர அந்த போஸ்டரில் எந்த மேஜிக்கலும் இல்லை. இதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள் இதுக்கு ஃபேன்மேட் போஸ்டரே பரவாயில்லையே என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும், அஜித் எதோ பைக் டூர் போகும் போது எடுக்கப்பட்ட போட்டோ மாதிரி இருப்பதாகவும், இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் எனவும் கூறி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் அஜித்தின் ஃபேன்மேட் போஸ்டர்களையும் ட்ரெண்ட் செய்து படக்குழுவை கலாய்த்து வருகின்றனர். அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களே விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பங்கம் செய்து வருவது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் ரசிகர்களின் இந்த ஆதங்கத்தைப் போக்க விரைவில் இன்னொரு போஸ்டர் அல்லது அப்டேட்டை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே விடாமுயற்சி படத்தில் அஜித்தின் மனைவியாக த்ரிஷா நடித்துள்ளதாகவும், அஜித் கேரக்டர் தனித்துவமாக இருக்கும் எனவும் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இந்தப் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படும் நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?