AjithKumar: பொங்கல் ரேஸில் விடாமுயற்சி VS குட் பேட் அக்லி..? ரசிகர்களை குழப்பும் போஸ்டர்!

குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அஜித்தின் போட்டோ வைரலாகி வரும் நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Oct 11, 2024 - 22:15
 0
AjithKumar: பொங்கல் ரேஸில் விடாமுயற்சி VS குட் பேட் அக்லி..? ரசிகர்களை குழப்பும் போஸ்டர்!
பொங்கல் ரேஸில் விடாமுயற்சி VS குட் பேட் அக்லி..?

சென்னை: அஜித்குமார் தற்போது குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விடாமுயற்சியில் நடித்துக்கொண்டிருக்கும் போதே, குட் பேட் அக்லியில் கமிட்டான அஜித், இரண்டு படங்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தை லைகா தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், இப்போது வரை எந்த அப்டேட்டும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வருகிறது.

கமல் – ஷங்கர் கூட்டணியில், லைகா தயாரித்து வெளியான இந்தியன் 2, எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து நேற்று ரிலீஸான வேட்டையன் படமும், லைகாவுக்கு ஏமாற்றம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியன் 2, வேட்டையன் இந்த இரண்டுமே லைகாவுக்கு லாபம் கொடுக்கவில்லை என்பதால், விடாமுயற்சியின் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை. அதேநேரம் விடாமுயற்சி படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு பிளான் செய்து வருவதாக சொல்லப்பட்டது. 

ஆனால், குட் பேட் அக்லி அபிஸியல் அப்டேட் வெளியாகும் போது, இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துவிட்டது. அதன்படி குட் பேட் அக்லி அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஆனால், விடாமுயற்சி தான் பொங்கலுக்கு வெளியாகும் என்றும், குட் பேட் அக்லி கோடை விடுமுறைக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வந்தன. இதனை மறுக்கும் விதமாக குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன. 

இதில் அஜித் செம ஸ்டைலிஷாக இருப்பது ஒருபக்கம் என்றால், இந்த அப்டேட்டில் குட் பேட் அக்லி பொங்கலுக்கு ரிலீஸாகும் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிசெய்துள்ளது. பொங்கலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால் குட் பேட் அக்லி படப்பிடிப்பும் வேகமெடுத்துள்ளது. இதனால் அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் தேதி எது என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. குட் பேட் அக்லிக்கு முன்னதாக, அதாவது டிசம்பர் இறுதிக்குள் விடாமுயற்சி ரிலீஸாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதனை லைகா தரப்பு இன்னும் கன்ஃபார்ம் செய்யவில்லை.

இந்நிலையில், ஸ்பெயினில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஷாலினி. சில தினங்களுக்கு முன்னர் அஜித்துடன் ரொமான்ஸ்ஸாக வாக்கிங் சென்ற வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து தற்போது இருவரும் க்யூட்டாக ஒரு போட்டோ எடுத்து, அதில் “காதல், அதுமட்டுமே எங்களது” என கேப்ஷன் கொடுத்துள்ளார் ஷாலினி. குட் பேட் அக்லி அஜித்தின் போட்டோவுடன், ஷாலினியின் இன்ஸ்டா பதிவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow