Thalapathy 69: விஜய்யின் தளபதி 69-ல் இணைந்த பாலிவுட் பிரபலம்... மிரட்டலாக வெளியான போஸ்டர்!

விஜய்யின் தளபதி 69 படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில், இதில் நடிக்கும் மற்ற நடிகர்களின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டு வருகிறது.

Oct 1, 2024 - 17:52
 0
Thalapathy 69: விஜய்யின் தளபதி 69-ல் இணைந்த பாலிவுட் பிரபலம்... மிரட்டலாக வெளியான போஸ்டர்!
தளபதி 69 படத்தில் இணைந்த பாபி தியோல்

சென்னை: கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ளார். இதனால் தனது கடைசிப் படமான தளபதி 69-ல் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் அவர், இன்னொரு பக்கம் தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகளையும் கண்காணித்து வருகிறார். விஜய்யின் கடைசிப் படமான தளபதி 69-ஐ ஹெச் வினோத் இயக்கவுள்ளது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.  

தற்காலிகமாக ‘தளபதி 69’ என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஒரிஜினல் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வரும் 4ம் தேதி தளபதி 69 படத்தின் பூஜை நிகழ்ச்சிக்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதன் தொடர்ச்சியாக அக்.5ம் தேதி முதல் தளபதி 69 படப்பிடிப்பு தொடங்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் இன்று முதல் அக்.3ம் தேதி வரை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது முதல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.   

இந்த அபிஸியல் அப்டேட்டில், பாலிவுட் நடிகர் பாபி தியோல் தளபதி 69 படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் வெளியான அனிமல் படத்தில் வெறித்தனமான வில்லனாக மிரட்டியிருந்தார் பாபி தியோல். அதன்பின்னர் பான் இந்தியா அளவில் பாபி தியோலுக்கு மார்க்கெட் உருவாகியுள்ளது. சூர்யாவின் கங்குவா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் பாபி தியோல், அடுத்து விஜய்யின் தளபதி 69 படத்திலும் வில்லனாக களமிறங்குகிறார். சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம், நவம்பர் 14ம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படங்களில் அவருக்கேற்ற வில்லன் கமிட்டாகவில்லை என ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். அதனால் தளபதி 69 படத்துக்காக பாலிவுட்டில் இருந்து தரமான வில்லனை இறக்கியுள்ளார் ஹெச் வினோத். பாபி தியோலை தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் யார் என்பது குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகவுள்ளன. இதனால் தளபதியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

தளபதி 69 படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் பிரேமலு பிரபலம் மமிதா பைஜூ விஜய்யின் தங்கையாகவும், பிரகாஷ்ராஜ் முக்கியமான கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow