Pakistan Terrorist Attack : பாகிஸ்தானில் தொடர்ந்து கேட்கும் தோட்டா சத்தம்.. நிலவும் அசாதாரண சூழல்.. என்ன நடக்கிறது?
Pakistan Terrorist Attack in Balochistan Province : பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் முசகேல் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 73 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் முசகேல் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 73 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Pakistan Terrorist Attack in Balochistan Province : பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (ஆகஸ்ட் 26) முசகேல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் மற்றும் டிரக் ஒன்றை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். பின் அதிலிருந்த மக்களை வெளியே கொண்டு வந்து அவர்களில் குடும்பத்தார் முன்னிலையிலேயே சுட்டுத்தள்ளியுள்ளனர். மேலும் அவர்கள் வந்த வாகனங்களையும், தீ வைத்து எரித்துள்ளனர் பயங்கரவாதிகள். இந்த தாக்குதலில் மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து முசகேல் உதவி கமிஷ்னர் நஜீப் கூறியது பின்வருமாறு: பலியானவர்களில் மூன்று பேர் பலூசிஸ்தானைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள். கடந்த நான்கு மாதங்களாக பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயணிகளை கடத்தி சென்று, அடையாளம் கண்ட பிறகே அவர்களை சுட்டு கொலை செய்துள்ளனர் என்றார்
இதனையடுத்து, இந்த கொடூரமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில், 14 ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் மற்றும் 21 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், பதில் தாகுதல் என மொத்தம் சுமார் 73 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: சிறையில் டீ பார்ட்டி, வீடியோ கால்.. நடிகருக்கு ‘விஐபி’ அந்தஸ்தில் கவனிப்பு.. அதிகாரிகள் மீது நடவடிக்கை
பாகிஸ்தானின் கிழக்கு மாகாணமாக பஞ்சாபை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வளங்களை சுரண்டுவதாக கருத்துவதால் பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், 2006ஆம் ஆண்டு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பலூச் தேசியவாதத் தலைவர் அக்பர் புக்தியின் நினைவு தினம் ஆகஸ்ட் 26ம் தேதி என்பதா இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றன எனவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் நிலவிவரும் இந்த அசாதாரணமான சூழலால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
What's Your Reaction?