Kannada Actor Darshan in Jail : சிறையில் டீ பார்ட்டி, வீடியோ கால்.. நடிகருக்கு ‘விஐபி’ அந்தஸ்தில் கவனிப்பு.. அதிகாரிகள் மீது நடவடிக்கை
Kannada Actor Darshan VIP Treatment in Jail : கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Kannada Actor Darshan VIP Treatment in Jail : பிரபல கன்னட நடிகர் தர்ஷன் ரசிகரை கடத்தி, கொலை செய்த வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து 17 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜூலை மாதம், நீதிமன்றக் காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் தர்ஷனும் அவருடன் கைது செய்யப்பட்ட சிலரும் பார்க் போன்ற ஒரு இடத்தில் அமர்ந்து காபி குடிப்பதும், சிகரெட் பிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டது. அதில், சிறையில் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி கோப்பை மற்றும் சிகரெட் உடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
அவருடன் மூன்று பேர் அப்போது அமர்ந்து பேசிக் கொண்டும் இருந்தனர். தொடர்ந்து, தற்போது வீடியோ காலில் தர்ஷன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், தர்ஷன் வெளிச்சமான ஒரு அறையில் அமர்ந்துள்ளார். எதிர்முனையில் பேசியவர் உணவு சாப்பிட்டீர்களா என கேட்க, தர்ஷனும் தலையை ஆட்டி சாப்பிட்டதாக சொல்கிறார்.
சுமார் 25 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவை பார்த்து பலர் அதிர்ச்சியடைந்த நிலையில், இது தொடர்பாக காவல்துறை உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியது. அதன்படி, தர்ஷனுக்கு சலுகை காட்டிய பெங்களூரு பரப்பன அக்ஹர ஹார சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்த தெரிவித்த கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், “சிறையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், தொடர்புடைய 7 அதிகாரிகளை கண்டறிந்து, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு குறைபாடு காரணமாக நடைபெற்ற, இந்த விஷயம் குறித்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?