இந்தியா

INDIA கூட்டணிக்கு CJP ஆதரவு ! போராட்டக் களத்தில் ஒன்றினையும் ராகுல் - அபிஜித் !

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்து தனித்தனியே போராட்டம் நடத்தி வந்த சிஜேபி-யும், இந்தியா கூட்டணியும் சேர்ந்து போராட்ட களத்தில் போராடபோவதாக அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் களத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

INDIA கூட்டணிக்கு CJP ஆதரவு ! போராட்டக் களத்தில் ஒன்றினையும் ராகுல் - அபிஜித் !
CJP Backs INDIA Bloc Rally !

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் பேரணிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுவரை தனித்தனியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வந்த இரு தரப்பினரும், தற்போது ஒரே பேரணியில் இணையும் சூழல் உருவாகியுள்ளது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியா கூட்டணியுடன் கைகோர்க்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டப் பேரணியை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

இந்தப் பேரணிக்கு தற்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் தனது ஆதரவை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமான வாக்குரிமையைப் பாதுகாப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும் அக்கட்சி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.



வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டும்!

ஜனநாயகத்தில் மக்கள் தங்களுக்கான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதே அடிப்படைக் கொள்கை. ஆனால், யார் வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசாங்கத்தின் கைகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மூலம் தகுதியுடைய குடிமக்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள், தேர்தல் நடைமுறையின் மீதான நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. அனைவருக்கும் சமமான அரசியல் பிரதிநிதித்துவம் கிடைப்பதும், தகுதியான ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமை உறுதி செய்யப்படுவதும் ஜனநாயகத்தின் முக்கியத் தூண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் நடைமுறைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக ஏற்கெனவே இந்தியா கூட்டணி கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் அதே கோரிக்கையை முன்வைத்திருப்பது, நவம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ள பேரணிக்கு கூடுதல் அரசியல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராம்லீலா மைதானத்தில் பேரணி: டெல்லி காவல்துறை அனுமதி!

இந்தியா கூட்டணி அறிவித்துள்ள பேரணிக்கு டெல்லி காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 1-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ராம்லீலா மைதானத்தில் நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மைதானத்திற்கு வெளியே பேரணி அல்லது போராட்டம் நடத்தக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால், எதிர்க்கட்சிகளின் பேரணி திட்டமிட்டபடி ராம்லீலா மைதானத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களும் பேரணியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பேரணியை ஒத்திவைக்க வணிகர்கள் கோரிக்கை!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள சந்தைப் பகுதிகளில் வணிக நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்பதால், பேரணியை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என டெல்லி வர்த்தகத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரணி நடைபெறவுள்ள ராம்லீலா மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பண்டிகைக் கால விற்பனை பாதிக்கப்படலாம் என்ற கவலையின் அடிப்படையில், இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்திக்கு வணிகர்கள் கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. நவம்பர் 1-ம் தேதிக்குப் பதிலாக நவம்பர் 10-ம் தேதிக்குப் பிறகு பேரணியை நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்துள்ளது.

இருப்பினும், பேரணியை ஒத்திவைப்பது தொடர்பாக இந்தியா கூட்டணி தனது முடிவை மாற்றிக்கொண்டதாகத் தகவல் இல்லை.

அரசியல் களத்தில் அதிகரிக்கும் கவனம்!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவி விலகல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள இந்தப் பேரணி, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுவரை தனித்தனியாகப் போராட்டங்களை அறிவித்து வந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் இந்தியா கூட்டணியும் ஒரே நிகழ்வில் இணைவது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் எத்தகைய அரசியல் முழக்கங்கள் முன்வைக்கப்படும், அதில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பன உள்ளிட்ட விவரங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.