Police Seized Bombs in Theni : 25 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீஸார்.. சமூக விரோத செயல்களில் ஈடுபட திட்டமா?..
Police Seized Bombs in Theni : தேனி அருகே 25 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றிய போலீஸார், சமூக விரோத செயல்களில் ஈடுபட திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Police Seized Bombs in Theni : தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காடுவெட்டி பகுதியில் பெரியகுளம் அரண்மனைக்கு சொந்தமான புளியந்தோப்பு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மாட்டுக் கொழுப்புக்குள் நாட்டு வெடிகுண்டுகளை உள்ளே வைத்து, புளியந்தோப்பில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் பாதுகாப்பு கிராம காவல் தலைவருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கிராம காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றபொழுது அங்கு விலங்குகளை வேட்டையாடுவதற்காக புளியந்தோப்பு பகுதியில் பல இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வனவிலங்கை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்துவிட்டு தப்பி ஓட முயன்ற, இரண்டு நபர்களை விவசாய கிராம காவல் குழுவினர் விரட்டிச் சென்றனர்.
அப்போது, பெரியகுளம் அருகே உள்ள ஏ.வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (30) என்பவரை போலீஸார் பிடித்தனர். மேலும் தப்பி ஓடிய நபர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (36) என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிடிபட்ட நபரை வைத்து புளியந்தோப்பு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட 29 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு சோதனை காவல்துறையினரும், கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை பத்திரமாக மீட்டு சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக பெரியகுளம் வடகரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் எங்கிருந்து பெறப்பட்டது. மேலும் வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட இவர்கள் திட்டம் தீட்டு உள்ளார்களா? என்பது குறித்தும், மேலும் நாட்டு வெடிகுண்டுகள் குறித்து வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தொடர் சாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட 29 நாட்டு வெடிகுண்டுகளை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு செயல் இழக்க செய்வதற்கான நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?