நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் அல்ல.. ஈசிஆர் சம்பவத்தில் கைதான சந்துரு வீடியோ

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொகுசு காரில் சென்ற இளைஞர்கள் சிலர் காரில் சென்ற இளம் பெண்களை துரத்திய சம்பவத்தில் கைதான சந்துரு என்பவரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Feb 2, 2025 - 15:27
 0
நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் அல்ல.. ஈசிஆர் சம்பவத்தில் கைதான சந்துரு வீடியோ
சந்துரு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திமுக கொடி பொருந்திய சொகுசு காரில் சென்ற இளைஞர்கள் சிலர் இளம்பெண்கள் சென்ற காரை  துரத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நள்ளிரவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அதிமுக, பாஜக போன்ற கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் கார் ஓட்டிச்சென்ற சந்துரு என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் அதிமுகாவைச் சேர்ந்தவர் என்று  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி இருந்தார்.

இந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சந்துருவின் வாக்குமூலம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஈசிஆர் வழக்கில் கார் ஓட்டியது, பெண்களை மடக்கியது நான்தான். ஏனென்றால் வண்டியை இடித்துவிட்டார்கள் என்று என்னுடன் இருந்த சந்தோஷ் என்பவர் கூறியதால் தான் காரை மடக்கினேன். வண்டியை இடித்ததை நான் பார்க்கவில்லை. அப்போது, அந்த பெண்கள் நாங்கள் நிற்க முடியாது என்றனர். ஆனால் சந்தோஷ் காரை மடக்க கூறியதால், சாலையை வழிமறித்து நிறுத்தினேன். 

அதன்பின் காரில் இருந்த பெண்கள் வீடியோ எடுத்தனர். தொடர்ந்து, காரை ரிவர்ஸில் எடுத்து வீட்டிற்கே சென்றுவிட்டனர். சந்தோஷ் அவர்களை பின் தொடர்ந்து சென்று அந்த பெண்களின்  ஃபிளாடிற்குள் சென்றுவிட்டார். ஆனால் என்னிடம் பிடிக்க சொன்ன கார் இது இல்லை அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கிளம்புவோம் என்றார். அந்த நேரத்தில் பெண்களுக்கும், சந்தோஷ்-க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சந்தோஷ் சாரி,  நீங்கள் போலீஸிடம் புகார் அளித்தால் என் கார் நம்பரை சொல்லுங்கள். எங்களை கூப்பிட்டால் நாங்கள் சந்தித்து கொள்கிறோம் என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். நான் எந்த கட்சியையும் சாராதவன். என் அம்மாவின் உறவினர்களான மாமா, தாத்தா இருவரும் அதிமுகவில் தான் இருக்கின்றனர். எம்ஜிஆரின் கார் ஓட்டுநராக என் தாத்தா இருந்தவர். 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

நள்ளிரவில் ஆயிரம் விளக்கு சென்றுவிட்டு, அதன்பின் சில இடங்கள் சுற்றினோம். அங்கிருந்து ஈசிஆர் வந்த போது பிரச்சனை வந்தது. அந்த நேரத்தில் நாங்கள் யாரும் குடிக்கவில்லை. அனிஷ் என்பவரிடம் இருந்து தான் கார் வாங்கினேன். அந்த காரை ரெடி செய்து நல்ல விலைக்கு விற்று தருகிறேன் என்று வாங்கினேன். அந்த காரில் இருந்த கொடியை கட்டுமாறு சந்தோஷ் தான் வலியுறுத்தினார். 

நாங்கள் கொடைக்கானல் செல்லலாம் என்று திட்டமிட்டோம். அவ்வாறு செல்லும் போது கொடி கட்டினால் சுங்க கட்டணம் கட்ட தேவையில்லை என்று கூறி கொடியை கட்ட சொன்னார்கள். ஜனவரி 10-ஆம் தேதி அந்த கொடியை காரில் போட்டோம் என்று அவர் கூறினார். இந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow