திருமணத்திற்கு மறுத்த காதலி கழுத்தறுத்து கொலை.. பாட்டிலால் குத்திக்கொண்டு உயிரை மாய்த்த இளைஞர்

திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

Oct 10, 2024 - 23:01
Oct 10, 2024 - 23:07
 0
திருமணத்திற்கு மறுத்த காதலி கழுத்தறுத்து கொலை.. பாட்டிலால் குத்திக்கொண்டு உயிரை மாய்த்த இளைஞர்
திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவி கொலை - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்

சிவகங்கை அருகே மதகுபட்டி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா (24). இவர் சிவகங்கையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரை சிங்கம்புணரி அருகே பிரான்மலையைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்பவர் ஒருதலையாய் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

தனது காதலியை மோனிஷாவை திருமணம் செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை மோனிஷாவின் பெற்றோர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், மதகுபட்டி சென்று விட்டு மீண்டும் மோனிஷாவை நேரில் சந்தித்து தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தினாராம்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது அங்கு கிடந்த அரிவாள்மனையால் மோனிஷாவின் கழுத்தை ஆகாஷ் அறுத்தார்.  இதில் பலத்த காயமடைந்த மோனிஷா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆகாஷ் அருகில் கிடந்த பீர் பாட்டிலால் தானும் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த அங்கு சென்ற மதகுபட்டி போலீஸார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மதகுபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow