பூமியை நோக்கி வரும் கில்லர்?! இந்தியாவுக்கு தேதி குறித்த நாசா..? ஹிரோஷிமாவை விட பெரிய பாதிப்பு?

விண்வெளியில் சுழன்றுக்கொண்டிருக்கும் ஒரு சிறுகோள் 2032ம் ஆண்டில் பூமியை தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த சிறுகோள் தாக்கினால் என்ன ஆகும்? அந்த சிறுகோளால் அபாயத்தில் உள்ள நாடுகள் எவை? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

Feb 19, 2025 - 15:46
 0
பூமியை நோக்கி வரும் கில்லர்?! இந்தியாவுக்கு தேதி குறித்த நாசா..? ஹிரோஷிமாவை விட பெரிய பாதிப்பு?
பூமியை நோக்கி வரும் கில்லர்?! இந்தியாவுக்கு தேதி குறித்த நாசா..? ஹிரோஷிமாவை விட பெரிய பாதிப்பு?

ஹாலிவுட்டில் லியோனார்டோ டி கேப்ரியோ, ஜெனிபர் லாரன்ஸ் நடிப்பில் 2021ம் ஆண்டில் வெளியான ’DONT LOOK UP’ படத்தில் பூமியை ஒரு மிகப்பெரிய எரிகல் தாக்குவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். தற்போது நிஜ வாழ்க்கையிலும் அதுபோன்ற ஒரு சிறுகோள் பூமியை தாக்க 2 புள்ளி 3 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

’சிட்டி கில்லர்’ மற்றும் 2024 YR4 என அழைக்கப்படும் இந்த சிறுகோள், 7 ஆண்டுகள் கழித்து, அதாவது 2032ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சிறுகோள் பூமியை தாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஒரு சதவீதம் மட்டுமே இருப்பதாக இதற்கு முன்னர் கூறப்பட்டது. ஆனால் தற்போது அதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி இந்த சிறுகோள் பூமியை தாக்குவதற்கான வாய்ப்பு 2 புள்ளி 3 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக பீதியை கிளப்புகின்றனர் நாசா விஞ்ஞானிகள்....

இந்த சிறுகோள் பயணிக்கும் பாதை, வேகம் மற்றும் அளவு ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்து வரும் விஞ்ஞானிகள் சில எச்சரிக்கைகளை வழங்கியுள்ளனர். அதன்படி, இந்த சிறுகோள் ஒருவேளை பூமியை தாக்கினால், பல்வேறு பகுதிகள் அழியும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவில் தொடங்கி, பசிபிக் பெருங்கடல், தெற்காசியா, அரேபியக் கடல் மற்றும் ஆப்பிரிக்கா வரை எங்கு வேண்டுமானாலும் இந்த சிறுகோள் தாக்க வாய்ப்பு இருக்கிறதாம்.

மேலும் வெனிசுலா, கொலம்பியா, ஈக்வடார், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எத்தியோப்பியா, சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளையும் சிறுகோள் தாக்கி அழிக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது லிட்டில் பாய் என்ற அணுகுண்டு போடப்பட்டது. இதில் அந்த நகரமே உருக்குலைந்து, அதன் தாக்கம் இன்றுவரை நீடிப்பது அனைவரும் அறிந்ததே.......

அந்த ஒரே ஒரு லிட்டில் பாய் அணுகுண்டை போல 340 அணுகுண்டுகளை வீசினால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுமோ, அதே அளவுக்கு ஆபத்தானதாக இந்த சிறுகோள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். 

சிறுகோள், பூமியை தாக்கும் வாய்ப்பு சற்று அதிகரித்துள்ளதால், இதனை உலகின் சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் உதவியுடன்  கூடுதல் தகவல்களைச் சேகரித்து பல்வேறு ஆய்வுகளும் நடந்து வருகிறது. 

கடந்த   1908ம் ஆண்டில் ’துங்குஸ்கா’  என்ற சிறுகோள் சைபீரியாவை தாக்கியது. இதனால் 830 சதுர அடி காடுகள் முற்றிலுமாக அழிந்துபோனது. அப்போது அந்த சிறுகோள் நகரங்களை தாக்காமல் காட்டுப்பகுதியை மட்டும் தாக்கியது. இந்நிலையில் இந்த சிட்டி கில்லர் சிறுகோளால் பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? ஏற்படுத்தாதா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.....

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow