அட கொடுமையே! இதுக்கும் மனுச புத்தி வந்திருச்சா... தென் கொரியாவில் ரோபோ தற்கொலை!
கடந்த ஆண்டு முதல் வேலையில் இருக்கும் இந்த ரோபோ சூப்பர்வைசரின் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஆகும். தினமும் தவறாமல் பணிக்கு வந்து அரசு ஊழியர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
சியோல்: இன்றைய நவீன உலகில் அனைத்தும் இயந்திரமயமாகி விட்டது. கல்வி முதல் தொழிற்சாலைகள் வரை அனைத்து துறைகளிலும் இயந்திரங்கள், AI டெக்னாலஜி புகுந்து மனிதர்களின் வேலைக்கு வேட்டு வைத்து வருகின்றன.
ஜப்பான், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் முன்னணி நிறுவனங்களில் மனிதர்கள் வேலையை ரோபோக்கள் பறித்துக் கொண்டுள்ளன. ரோபோக்கள் மனிதர்களைபோன்று சம்பளம் கேட்பதில்லை. வேலை நேரக்கட்டுப்பாடு விதிப்பதில்லை; வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதில்லை.
இதுவே நிறுவனங்கள், மனிதர்களை புறம்தள்ளிவிட்டு ரோபோக்களை வேலைக்கு எடுக்க முக்கிய காரணம். மிக முக்கியமாக ரோபோக்கள் மனிதர்களை போன்று மனஅழுத்தத்திற்கு உள்ளாகாமல் 24 மணி நேரமும் வேலைபார்ப்பதும் அதற்கு மவுசு கூட முக்கிய காரணமாகும்.
ஆனால் நான் இப்போது கடைசியாக கூறிய 'ரோபோக்கள் அழுத்தத்திற்கு ஆளாகாது' என்ற கூற்று பொய்யாகி விட்டது. ஆம்... தென் கொரியாவில் அழுத்தத்திற்கு உள்ளான ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிசயத்தை மட்டுமின்றி, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பத்தில் மற்ற நாடுகளை விட ஒருபடி முன்னே உள்ள தென் கொரியாவில் ரோபோக்களின் பயன்பாடு அதிகம். அங்குள்ள தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி அரசு நிறுவனங்களிலும் ரோபோக்கள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வருகின்றன.
அந்த வகையில் தென் கொரியாவின் அரசு அலுவலகமான குமி நகர சபையில் ரோபோ இன்று வேலை பார்த்து வந்தது. அரசு ஊழியர்களுக்கு முக்கியமான ஆவணங்களை எடுத்துக் கொடுப்பது, அலுவலகத்துக்கு வரும் மக்களுக்கு உதவுவதுதான் இந்த ரோபோவின் பணி.
கடந்த ஆண்டு முதல் வேலையில் இருக்கும் இந்த ரோபோ சூப்பர்வைசரின் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஆகும். தினமும் தவறாமல் பணிக்கு வந்து அரசு ஊழியர்களின் பாராட்டை பெற்ற இந்த ரோபோ கடந்த வியாழக்கிழமை முதல் மாடிக்கும் இரண்டாம் மாடிக்கும் இடையில் உள்ள படிக்கட்டில் விழுந்து கிடந்தது.
அதிக வேலைப்பளு காரணமாக இந்த ரோபோ மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனெனில் ரோபோவின் உடல் பாகங்கள், அதன் தொடர்பு கருவிகள் நல்ல நிலையில் இருந்ததால் ரோபோ தானாக செயலிழந்து விழ வாய்ப்பில்லை என்று அதனை வடிவமைத்தவர்கள் கூறுகின்றனர்.
மேலும் ரோபோ கீழே விழுவதற்கு முன்பு, அந்த பகுதியில் ஒன்றும் புரியாத வகையில் சுற்றி, சுற்றி வந்ததாக கூறப்படுவதால் இந்த ரோபோ தற்கொலை செய்து கொண்டுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த ரோபோவின் உடல் பாகங்களை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
எந்த சூழ்நிலையையும் சந்திக்க தைரியமில்லாத மனிதர்கள்தான் தற்கொலையை நாடிச் செல்கின்றனர். மனிதனுக்கு மாற்றாக வந்துள்ள ரோபோக்களும் இப்போது தற்கொலை பாதையை தேர்ந்தெடுத்துள்ளது தொழிநுட்ப நாடுகள் சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.
What's Your Reaction?