மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யாரு? - விறுவிறு வாக்கு எண்ணிக்கை

மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட்டின் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 

Nov 23, 2024 - 20:52
Nov 23, 2024 - 22:28
 0
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது  யாரு? - விறுவிறு வாக்கு எண்ணிக்கை
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது  யாரு? - விறுவிறு வாக்கு எண்ணிக்கை

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் மாநிலத்தில் சட்டமன்றத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், இரு மாநிலங்களிலும் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 9.70 கோடி போ் வாக்களிக்க தகுதிபெற்ற இத்தோ்தலில் 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 1995ம் ஆண்டுக்கு பிறகு சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும். இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி பாஜக கூட்டணி ஆட்சியமைக்குமா அல்லது ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளா்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சோ்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2000-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் உருவானதில் இருந்து சட்டப் பேரவைத் தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும். மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட்டின் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68 தொகுதிகளிலும், அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் 10 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி ஓரிடத்தில் களம் கண்டன. இதில் முதலமைச்சரும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா செயல் தலைவருமான ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன், மாநில பாஜக தலைவா் பாபுலால் மராண்டி, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் கட்சித் தலைவா் சுதேஷ் மகதோ உள்பட மொத்தம் ஆயிரத்து 211 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஜாா்க்கண்டில் கடந்த 2019ம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 30 இடங்களில் வென்றது. அக்கட்சி தலைமையிலான கூட்டணி 47 இடங்களுடன் பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 25 இடங்களே கிடைத்தது. இந்த நிலையில், ஆட்சியை கைப்பற்ற ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதனால் ஜார்க்கண்டில் யாரு அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதேபோல் கேரளாவின் வயநாடு உள்ளிட்ட மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow