இங்கிலாந்து தேர்தலில் வென்ற தமிழ் மகள் உமா குமரன்...குவியும் வாழ்த்துக்கள்.. யார் இவர்?

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் பெண்ணான உமா குமரன் சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.மிக இளம் வயதிலேயே பிரிட்டன் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு உலகம் முழுவதிலும் இருந்தும் உமா குமரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. யார் இந்த உமா குமரன் என்று பார்க்கலாம்.

Jul 5, 2024 - 16:54
 0
இங்கிலாந்து தேர்தலில் வென்ற தமிழ் மகள்  உமா குமரன்...குவியும் வாழ்த்துக்கள்.. யார் இவர்?
uma kumaran

இலங்கை தமிழ் பெண்ணான உமா குமரன், கிழக்கு லண்டனில் பிறந்தவர்.. இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே லண்டனில் தான். இலங்கை போரின் போது இவரது பெற்றோர்கள் லண்டனுக்கு புலம் பெயர்ந்தனர். உமா குமரன், அரசியலில் இளநிலை பட்டமும், பொதுக் கொள்கையில் பட்ட மேற்படிப்பும் முடித்தவர். NHS Professionals  என்ற தனியார் நிறுவனத்தில் தற்காலிக பணியில் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையை துவங்கிய உமா குமரன், கடந்த 2010ம் ஆண்டு முதல் தொழிலாளர் குழுக்களுக்காக பணியாற்றி வந்தார்.

2015ல் உள்ளூர் அரசு கழகத்தில் அரசியல் ஆலோசகராக சேர்ந்து, பிறகு பல பதவிகளை வகித்த இவர் 2010ம் ஆண்டு லண்டன் போரக் ஆஃப் ஹாரோவ் பகுதியில் நடைபெற்ற உள்ளூர் தேர்தலில் போட்டியிட்டார். தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் அந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை. பிறகு 2013ல் ஹரோவ் கிழக்க பகுதியில் நடந்த தேர்தலிலும் தொழிலாளர் கட்சி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த தேர்தலிலும் தோல்வியை சந்தித்த இவர், 2017ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பங்கேற்கவில்லை. 

2014ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட Stratford and Bow தொகுதியில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் 11,634 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் இவர் 19,145 ஓட்டுக்கள் பெற்றுள்ளார். மிக இளம் வயதிலேயே பிரிட்டன் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு உலகம் முழுவதிலும் இருந்தும் உமா குமரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தனது ஆதரவாளர்களிடையே பேசிய உமா குமரன், முதல் முறையாக Stratford and Bow பார்லிமென்ட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்னுடைய வாழ்நாள் கெளரவமாக நினைக்கிறேன். என் மீதும், எங்களுடைய தொழிலாளர் கட்சி மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி. நான் எப்போதும் உங்களின் குரலாக, உங்களின் பிரதிநிதியாக இருப்பேன். உங்களை எப்போதும் வீழ்வதற்கு நான் விட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow