திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Jan 29, 2025 - 13:46
 0
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள்..!
திமுக எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று  (ஜன .29) நடைபெற்றது. இந்த ஆலோசனை 
கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

1. ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை அரசியல் மையமாகும் ஆளுநர் பதவி கண்ணியத்தை  காக்கின்ற வகையில் ஆளுநர்களுக்கு நடத்தை விதிமுறைகள் உருவாக்கிடவும் மாநில அரசுகள் அனுப்புகின்ற கோப்புகள் மற்றும் மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்து இடுவதற்கான கால நிர்ணயத்தை உருவாக்கிட வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தியும் வருகின்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது திமுக நாடாளுமன்ற  உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும். 

2. டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம். 

3.5370 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழகத்தில் இருந்துள்ளது என்பதை உலகிற்கு உணர்த்திய தமிழக அரசின் சாதனையை மத்திய அரசும் பிரதமர் மோடியும் முன்னெடுக்க வேண்டும்.

4.கூட்டாட்சி தத்துவம் மற்றும் மாநில கல்வி உரிமை பறிக்கின்ற வகையில் அமைந்திருக்கும் பல்கலைக்கழக மானிய குழுவின் வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக மாணவர் அணி மற்றும் எம்பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

5. சிறுபான்மையினரின் நலனைப் பாதிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதா 2024-யை கொண்டு வந்துள்ளது. அதில், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலும் முறைப்படி விவாதம் நடத்தாமல் எதிர்கட்சி உறுப்பினர்களை எல்லாம் வெளியேற்றி ஆரோக்கியமான விவாதமே பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிநாதம் என்பதை மறந்து எதிர்கட்சிகள் அளித்த 44 திருத்தங்களையும் ஏற்காமல் அவசர அவசரமாக டெல்லித் தேர்தலை மனதில் வைத்து மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்ற துடிப்பதற்கு இந்த எம்.பி.க்கள் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இச்சட்டத் திருத்தம் மீண்டும் அவையில் கொண்டு வரப்படும்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக தலைவரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப தீவிரமாக எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.

6.தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாமல் கடந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள பாஜக அரசு இந்த முறை தமிழ்நாட்டின் திட்டங்கள் மற்றும் பேரிடருக்கு நிதி ஒதுக்கிடவும் மாநிலத்திற்கு திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவித்த வேண்டும் என்கின்ற தீர்மானமும் இன்று நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow