விஜய்யும்... அரசியலும்... அஷ்டம சனியும்.. ஜோதிடரின் விசேஷ கணிப்பு!
அஷ்டம சனி நடக்கும் வேளையில் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக மாநாடு, 7 மணிக்குள் முடிவுக்கு வந்தது. 4 மணிக்கு தவெக மாநாட்டு மேடை ஏறிய விஜய், 5.26 மணிக்கு பேசத் தொடங்கினார். பேசுவதற்கு முன்பு தனது தாய் ஷோபா, தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இருவரையும் கட்டியணைத்து ஆசிர்வாதம் பெற்ற விஜய், 6.13 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்து உரை நிகழ்த்தினார்.
ஆரம்பம் முதலே ஆவேசமாக பேசத் தொடங்கிய விஜய், ஒரு குழந்தைக்கு தனது அம்மா மீதான பாச உணர்வை வெளிக்காட்டத் தெரியாது. அதுபோல தான் ஒரு பாம்பு படமெடுத்து நிற்கும் போதும், அந்த குழந்தை தாயை பார்த்து சிரித்தது போல பாம்பையும் நினைக்கும். அதனால் பாம்பை கையில் பிடித்து விளையாட யோசிக்காது. அந்த பாம்பு தான் அரசியல், அதனை கையில் பிடித்து விளையாட எனக்கு பயம் கிடையாது. அரசியலுக்கு நாம் குழந்தை தான், கவனமாக களமாடவேண்டும். பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பது தான் நம்ம CONFIDENCE. பாம்பா இருந்தாலும் பாலிடிக்ஸா இருந்தாலும், கையில எடுக்கணும்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் சீரியஸ்னஸோட கொஞ்சம் சிரிப்பையும் சேர்த்து செயல்படுறதுதான் நம்ப ஸ்டைலு நம்ப ரூட்டு என்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்கள், வழிகாட்டுத் தலைவர்கள் பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார், பச்சைத் தமிழன் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், வீரமங்கை வேலு நாச்சியார் என அறிவித்தார். அதேநேரம், பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை நாம் கையில் எடுக்கப் போவது கிடையாது; எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தை தான் முக்கியம் என்றார். காமராஜர் வழிகாட்டி, இந்திய துணை கண்டத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் அண்ணல் அம்பேத்கர். பெண் தலைவர்களை வழிகாட்டியாக கொண்ட கட்சி தவெக தான் என்றார்.
இந்நிலையில், அஷ்டம சனி நடக்கும் வேளையில் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் விஜய்யின் ஜாதகத்தை கூகுளில் தேடி பார்த்தபோது கிடைத்தது. அவர் கடகம் ராசியாம். அஷ்டம சனி நடக்கும் போது அரசியலுக்கு வந்திருக்காரே என ஆச்சர்யம் வேண்டாம். அஷ்டம சனி நடக்கும் போதுதான் நிறைய சவால்களையும் போராட்டங்களையும் சந்திக்க முடியும். அவர் எப்பவும் போல சினிமாவுல நடிச்சுகிட்டு பணத்தை சேர்த்துகிட்டே இருந்தா, ஆஸ்பிடல் போயாகனும் அல்லது குடும்ப பிரச்சனைகள், வழக்குகள், நிறைய அவமானங்கள், பணத்தை இழப்பது இப்படி உண்டாகி இருக்கும்.
சனி என்பது வெகு ஜனத்தை குறிக்கும். கும்பலாக மக்கள் ஒரு இடத்தில் கூடுவது சனி. அப்படி ஒரு கூட்டத்தில் நின்று கொண்டு நான் உங்களை நம்பிதான் வந்திருக்கேன்...என்று சொன்னால் அதை விட அஷ்டம சனிக்கு நல்ல பரிகாரம் எதுவும் இல்லை. அதாவாது நிராயுத பாணியாகி விடுவது சனிக்கு பிடிக்கும். சொத்து கரைக்கனும் அது மக்களுக்கு போய் சேர்ந்தால் பலம் கூடும்.
சம்பாதிச்சு சேர்த்து வெச்சு என்ன செய்ய போறேன்னு சொன்னார் பாருங்க. அதுல சனி ஒளிஞ்சிருக்கார் அதாவது சம்பாதிச்ச பணத்தை இழக்க தயார் ஆகிட்டார். இப்ப அவர் ஆயுள் பலம் மன பலம் கூடும். அவர் ஜெயிப்பது முதல்வர் ஆவது ஒரு பக்கம் இருக்கட்டும். சனி அவரை கடுமையாக உழைக்க வைக்க போகிறார். தினசரி அவமானங்களை, சவால்களை, கொடுத்து அவரை உறுதி செய்து கொண்டுள்ளார் சனி. சனியிடம் அவரை ஒப்படைத்துக் கொண்டுள்ளார். சனி முடியும் போது ஏதேனும் ஒரு வகையில் அவர் உழைப்பு வீண் போகாது. அவரை ஒரு தலைவராக மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு கொண்டு வந்தாலே அது விஜய்க்கு பெரிய வெற்றி தான்” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?