உதகையில் 6 நாட்கள் மலர்க்கண்காட்சி.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு... இந்தாண்டு சுமார் 2 இலட்சம் சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்ப்பு...
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுகிறது. இச்சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் உதகைக்கு வருவது வழக்கமாக உள்ளது.
மலர் கண்காட்சி
சுற்றுலா பயணிகளை கவர தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி உட்பட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு மலர் கண்காட்சியை காண 2 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில் இந்தாண்டுக்கான கோடை விழாக்கள் குறித்து இன்று உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
127 மலர் கண்காட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளார்களிடம் பேசிய போது, இந்த ஆண்டு தோட்டக்கலைத்துறை சார்பில் 6 பூங்காக்களில் கோடை விழாக்கள் நடத்தப்பட உள்ளதாகவும், அதன்படி கோத்தகிரி நேரு பூங்காவில் மே 3, 4 ஆகிய தேதிகளில் 13வது காய்கறி கண்காட்சியும், உலக புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே 16, 17,18,19,20,21 ஆகிய தேதிகளில் 6 நாட்கள் 127வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ரோஜா பூங்காவில் 10, 11, 12ஆகிய தேதிகளில் 20வது ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 23,24,25 ஆகிய தேதிகளில் 65வது பழக்கண்காட்சியும், கூடலூரில் 11வது வாசனை திராவிய கண்காட்சி மே 9,10,11 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும், முதன் முறையாக குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப் பயிர்கள் கண்காட்சி 30, 31 மற்றும் ஜுன் 1 ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா உட்பட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தார்.
What's Your Reaction?






