கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்தது எப்படி?- ஆய்வு அறிக்கை ஒப்படைப்பு
ரயில் பெட்டிகளில் ஜெனரேட்டர்களில் பயன்படுத்தப்படும் டீசல்கள் வெளியேறி இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கவரைப்பேட்டையில் விதிகளை மீறி எரிபொருள் ரயிலில் கொண்டு செல்லப்பட்டு விபத்து ஏற்பட்டதா? என தொழில்நுட்ப ரீதியான ஆய்வு அறிக்கை சீலிடப்பட்ட கவரில் ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை அடுத்த கவரைப்பேட்டையில் கடந்த 11ஆம் தேதி இரவு லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலானது மோதி பெரும் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (NIA), ரயில்வே போலீசார் என தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுவரை ரயில்வே ஊழியர்களிடம் கொருக்குபேட்டை ரயில்வே போலீசார் சம்மன் அளித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கவரைப்பேட்டையில் மூன்று நட்டு போல்டுகள், பொன்னேரியில் 6 நட்டு போல்டுகள் கழட்டுப்பட்டுள்ளதும் சில இடங்களில் ஜங்ஷன் பாயிண்டுகள் காணமல் போனதும் ரயில்வே போலீசாரின் விசாரணையில் தெரியவந்த நிலையில் விபத்துக்கு இவை காரணமாக இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்தது. தண்டவாளத்தில் நட்டு, போல்ட் மற்றும் ஜங்ஷன் பாயிண்ட் காணாமல் போனதால், நாசவேலை காரணமாக இருக்கலாம் என மட்டுமே ரயில் விபத்து நிகழ்ந்துள்ளதாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அதிகாரிகளுக்கு நாச வேலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் இதுவரை ஆதாரங்கள் சிக்கவில்லை என தெரியவந்து. மேலும் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது விதிகளை மீறி எரிபொருள்கள் ரயிலில் கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் ரயில் பெட்டிகளில் ஜெனரேட்டர்களில் பயன்படுத்தப்படும் டீசல்கள் வெளியேறி இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதை அணைக்கும் வகையிலான செயல்பாடுகள் செயலிழந்து போனது ஏன் என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை என்பது நடைபெற்று வருகிறது.
தொழில்நுட்ப ரீதியான ஆய்வு அறிக்கையை ஆய்வகத்தில் இருந்து ரயில்வே துறைக்கு சீலிடப்பட்ட கவரில் கொடுக்கப்பட்டுள்ளது இதை அடிப்படையாக வைத்து ரயில்வே துறை விசாரணை நடத்த உள்ளதாக தெரியவந்துள்ளது ரயில்வே துறையின் அறிக்கையை அடிப்படையாக வைத்து காவல்துறையின் அடுத்த கட்ட விசாரணை தீவிரமடையும் எனவும் காவல்துறை தரப்பில் கூறியுள்ளனர். விபத்தின் பின்னணி என்ன என்பது குறித்து இதுவரை ரயில்வே துறை மற்றும் காவல் துறை உறுதி செய்வது சவாலாகவே இருந்து வருகிறது.
What's Your Reaction?