Today weather: காலையிலேயே தொடங்கியது.. 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சென்னை உட்பட பல மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், இன்றைய தினம் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தினை தவிர்த்து இன்று அண்டை மாநிலமான கேரளா மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழ்நாடு,புதுச்சேரி, கேரளா, அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று (11-03-2025) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவாரூர், இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, தூத்துக்குடி, கடலூர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Read more: PM SHRI.. யூ-டர்ன் அடித்தார் உங்கள் சூப்பர் முதல்வர்: MP பேச்சால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெப்ப அலை: சிவப்பு நிற எச்சரிக்கை
இன்று குஜராத்தில் அதிக வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதேபோல் ராஜஸ்தானில் மிதமான வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வானிலைத் தொடர்பான உடனடி விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும் அறிவுறுத்தப்படுகிறது.
Read more: கொளுத்துற வெயிலுக்கு மத்தியில் ஆரஞ்ச் அலர்டா? கனமழை பெய்யும் மாவட்டங்கள் எது?
What's Your Reaction?






