கணவரின் உயிரைக் காவு வாங்கிய கள்ளத்தொடர்பு... மனைவி வெறிச்செயல்!

மதுரையில் கணவனை கள்ளக்காதலன் உடன் சேர்ந்து திட்டம் போட்டு மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nov 24, 2024 - 03:48
 0
கணவரின் உயிரைக் காவு வாங்கிய கள்ளத்தொடர்பு... மனைவி வெறிச்செயல்!
கணவரின் உயிரைக் காவு வாங்கிய கள்ளத்தொடர்பு... மனைவி வெறிச்செயல்!

மதுரை சோழவந்தான் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முகம் சிதைந்த நிலையில் ஒருவர் இறந்து கிடந்துள்ளதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடலும் முகமும் சிதைந்த நிலையில் ரயில் தண்டவாளத்தில் உடல் கிடைத்ததை வைத்து ரயிலில் அடிபட்டு இறந்துள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் முகம் சிதைந்திருந்த காரணத்தினால் அடையாளம் தெரியாததால் இறந்த நபர் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில், பிரேத பரிசோதனையின் முடிவில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில் உயிரிழந்த நபர் ரயிலில் அடிபட்டு இறக்கவில்லை என்றும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில்,  இறந்த நபர் ஒட்டன்சத்திரம், இடும்பன்குரும்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்றும், அவர் எலெக்ட்ரிசியன் பணி செய்யும் சக்திகணேஷ் என்பதும் தெரியவந்தது. மேலும், மது பழக்கத்திற்கு அடிமையான சக்தி கணேஷுக்கும் அவரது மனைவி பரமேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த சூழலில் சக்தி கணேஷின் தூரத்து உறவினரான பெயிண்டர் பணி செய்யும் கண்ணன், சக்தி கணேஷின் வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போது கண்ணனுக்கும் பரமேஸ்வரிக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சக்தி கணேஷ், இருவரிடமும் இதுகுறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரமேஸ்வரி, தனது கணவர் சக்தி கணேஷை கொலை செய்ய கண்ணனுடன் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சோழவந்தான் அருகே உள்ள ரயில் தண்டவாளம் அருகே சக்தி கணேஷும் கண்ணனும் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த கண்ணன், போதையிலிருந்த சக்தி கணேஷை கொலை செய்து விட்டு, முதத்தை சிதைத்து பின்பு அவரது உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றுள்ளார். இதனையடுத்து கொலை செய்த கண்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பரமேஸ்வரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow