ராஜீவ் காந்தியோடு கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை சந்திக்காதது ஏன்?- ராகுலுக்கு வானதி சீனிவாசன் கேள்வி
ராஜிவ் காந்தி உடன் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 16 குடும்பத்தினரையோ, அல்லது கொலை நடந்த போது படுகாயம் அடைந்தவர்களையோ சந்திக்கவில்லை பிரியங்கா காந்தி சந்திக்காதது ஏன்?
வயநாட்டில் பிரியங்காவின் வெற்றிக்காக, தந்தை ராஜிவ் காந்தி கொலையை வைத்து அனுதாபம் தேடுகிறார் ராகுல் காந்தி என வானதி சீனிவாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் தனது சகோதரி பிரியங்கா காந்தியை ஆதரித்து நவம்பர் 3-ம் தேதி பிரசாரம் செய்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, 'எனது தந்தை ராஜில் காத்தி கொலை வழக்கில் சிக்கிய பெண்ணை நேரில் சென்று சந்தித்து கட்டிப்பிடித்துக் கொண்டவர் பிரியங்காகாந்தி நளினியை சந்திந்து விட்டு வந்த பின்பு என்னிடம் பேசிய பிரியங்கா மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். நளினி மீது பரிவு காட்டியவர்' என கூறியிருக்கிறார். ஆனால், சிறையில் சந்தித்த பிரியங்கா தன் மீது கோபத்தை கொட்டியதாக நளினி பதிவு செய்திருக்கிறார்.
ராஜீவ் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் என்ற நூலில் வேலூர் சிறையில் பிரியங்கா காந்தி தன்னை சத்தித்தபோது நடந்ததை நளினி பதிவு செய்துள்ளார். அதில், ராஜீவ் கொலை வழக்கு குறித்து நான் கூறிய தகவல்களைக் கேட்டு பிரியங்கா கோபத்தின் உச்சிக்கு சென்றார். அவரது கோபக் கொந்தளிப்பு எனக்கு நடுக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து எதிர்ப்பு கேள்விகளை முன்வைத்தபடியே கோபத்தை கொட்டினார். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் கழித்து என்னைத் தேடி வருவானேன் என்ற காரணமும் நோக்கமும் அரசியல் பின்னணி கொண்டதே அப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்கு எங்கள் சத்திப்பை பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கலாம் என நளினி கூறியிருக்கிறார்.
நளினியின் புத்தகம் குறித்து 2016 நவம்பர் 22ல் பி.பி.சி தமிழ் வெளியீட்ட விமர்சன கட்டுரையிலும் இந்த தகவல்கள் உள்ளன உண்மை இவ்வாறு இருக்க, 'தந்தை ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி மீது பரிவு காட்டியவர் பிரியங்கா என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பொய் சொல்லியிருக்கிறார். தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்பதற்கு வயநாட்டில் ராகுல் காந்தியின் பேச்சே உதாரணம்.
வேலூர் சிறையில் தன்னை பிரியங்கா காந்தி சந்தித்தது, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக இருக்கலாம் என்று நளினி தனது புத்தகத்தில் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். வயநாட்டில் ராகுல் காந்தியின் பேச்சு இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.
1991 மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜின் காந்தி கொல்லப்பட்டது பெரும் துயரமான சம்பவம் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எந்த அளவுக்கு வருத்தமும் வேதனையும் கொண்டிருந்தார் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் எழுதிய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். ஆனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு 33 ஆண்டுகளுக்குப் பிறகும் அதை தங்களது அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் பயன்படுத்துகின்றனர் என்பது வயநாட்டில் ராகும் காந்தியின் பேச்சு உறுதிப்படுத்தி விட்டது.
அரசியல் அவலம் இது தந்தை ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் சிறைக்கு சென்று நளினியை சந்தித்த பிரியங்கா, ராஜிவ் காந்தி உடன் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 16 குடும்பத்தினரையோ, அல்லது கொலை நடந்த போது படுகாயம் அடைந்தவர்களையோ சந்திக்கவில்லை. அந்த காயத்தின் வடுக்களோடு இன்றும் வாழ்பவர்கள் மீது பரிவு காட்டவில்லை. சோனியா காந்தி இப்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அவரது மகன் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். இப்போது ராகுலின் சகோதரி வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அது மட்டுமல்லாது பிரியங்கா காந்தியின் மகளையும் அரசியலுக்கு கொண்டுவர தயார் படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியை ஒரு குடும்பத்துக்குள்ளேயே உருவாக்கிக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா எம்.பியாக வேண்டும் என்பதற்காக மக்களின் உணர்வுகளை தூண்டி விடுகிறார் தந்தையின் கொலையையும் அதற்கு பயன்படுத்துகிறார். வெட்கக்கேடு” என காட்டமாக தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?